பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

15


யும் நாடு கண்டிருக்கிறது. எனக்குத்தெரிய, ஒருதேசீயப் பிரசங்கியார் (இன்று அவர் இந்து மகாசபைவீரராக வேடமெடுத்துள்ளார்) ஒருமுறை பிரிட்டனைக் கண்டித்துப் பேசுகையிலே கூறினார், மகாஜனங்களே! பிரிட்டனிலே என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்? வெறும் சுண்ணாம்பும், நிலக்கரியும்! நிலக்கரிக்காகச் சுரங்கங்கள் தோண்டித் தோண்டி, பிரிட்டன் பாழாகிவிட்டது. முப்பதுகோடி இந்தியரும் (அன்றைய ஜனத்தொகை 30 கோடி) சேர்ந்து மூச்சு விட்டால், பிரிட்டன் ஆடிக்காற்றிலே சிக்கிய இலவம் பஞ்செனப் பறந்துபோகும்." இந்த உரைகேட்ட வீரர் குழாம் கை தட்டி ஆரவாரித்ததும், எனக்குத்தெரியும். ஆகவே, நான், சர் சண்முகம் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைக் கண்டித்துப் பேசியதை மாபெரும் வீரம் என்று கூறவில்லை. 1920லே அம்மொழி வீரமாக இருந்திருக்கலாம். இன்றோ ! அம்மொழி பழங்கஞ்சி. வீட்டுக்கு வீடு,கலயத்திலே அது உளது! இந்நாட்டுச் சொற்பொழிவாளரின் அரிச்சுவடியே அதுவாக இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியல்ல எனக்கு ஆனந்த மூட்டியது.

நாட்டு விடுதலைபற்றிப் பேசிடாத தலைவர் இல்லை. ஆனால், அந்த விடுதலை கிட்டாததன் காரணம் என்ன என்று உசாவிடுவோர் வெகு சிலரே. உண்மை தெரிந்த பின், அதனைத் தைரியமாகக் கூறிடுவோர் அதனினும் மிகச்சிலரே. உரைத்ததோடு அமையாமல், உறுதியுடன் நின்று பணிபுரிவோர் அதனினும் மிகமிகச் சிலரே. அன்னிய நாட்டினரை மிரட்டவோ, மயக்கவோ, இங்கு ஆட்கள் அனேகர். ஆனால் இங்கு விடு-