பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

வர்ணாஸ்ரமம்


யாததல்ல வென்பதையும், தியாக உணர்ச்சியுடன் தொண்டாற்றும் திறன் உள்ள தலைவர் வேண்டுமென்பதையும், இன்று நமக்கு வேண்டிய தலைவர் அரசாள அல்ல, அரசு அமைக்க, என்பதையும் எடுத்தெழுதினேன். இவ்வளவும், வர்ணாசிரமம் ஒழிக! என்ற பரணியைப் பல்கலைக் கழகத்திலே, அன்று சர் சண்முகம் பாடின தன் விளைவே. எனக்கு எவ்வண்ணம் இப்பரணி, எழுச்சியை ஊட்டிற்றோ, அதேபோலே, இந்து, மித்திரன், முதலிய ஏடுகட்கு எரிச்சலையூட்டிற்று. பாசிபடர்ந்த மனத்தினிடம் நான் பரிசுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. எனவே அப்பத்திரிகைகளின் போக்கு எனக்கு வியப்பூட்டவில்லை. அவை கக்கிய கண்டனம், காசநோயாளியின் இருமல்போல, அவைகளின் நோய்க்குள்ள குறிகளேயன்றி வேறல்ல; எனவே பரிதாபமன்றிச் சீற்றமெழவில்லை, அவற்றிடம். ஆனால் அவைகளிலே ஒன்றான மித்ரன், கண்டனத்தினூடே கோத்திருந்த ஒரு கருத்து, என்னைச் சற்றுச் சிந்திக்கச் செய்தது, தோழர்களே ! சற்றுச் சோகத்தையும் தந்தது.

சர் சண்முகம், வகுப்புத் துவேஷம் வளர்க்கிறார், என்றுரைத்தது மித்ரன். இது, பழய பஞ்சாங்கத்திலே ஒருபகுதி ! அதுகண்டு நான் ஆச்சரியப்படவுமில்லை ஆயாசப்படவுமில்லை. "நாசமாய்ப் போனவன், மணி பன்னிரண்டாகியும் தூங்கக் காணோமே" என்று கைநொடிப்புடன் கூறுவாள் கள்ளி. காமவேசனையாலும், அதனைத் தீர்த்திடும் கள்ளப் புருடனாலும் பீடிக்கப்பட்ட கள்ளிக்குக் கணவன் விழித்திருப்பது கூடக் குற்றமெனத் தோன்றலாம். விபசாரியின்