பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

35


இந்த விசாரத்தைக் கண்டு, அபசாரம் அபசாரம் என்று கூறும் பேர்வழி, ஆண்மையற்றவனாகத்தானே இருக்கமுடியும் ! வில்லுக்கு ஒரு அம்பு, பல்லுக்கு ஒரு எலும்பு, அதுபோல் பாதிராத்திரி வேளையிலே பக்கத்துக்கோர் ஆள்,தேடும் பாதகியின் மொழியைத் துச்சமெனத் தள்ளிடுதல்போல, நான் ஆரிய ஏடுகளின், கண்டனமொழிகளைத் துச்சமாகவே கருதுகிறேன். ஆனால் மித்ரன் ஒன்று எழுதிற்று, என் உள்ளம் கொஞ்சம் வேதனையடைந்தது. சர் சண்முகம் வர்ணாசிரமக் கோட்டையைத் தகர்க்கவேண்டுமென்று கூறுகிறார். அவர் நமது பழய நூற்களின் அருமை பெருமைகளை இப்போதுதான் கொஞ்சங் கொஞ்சம் தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார். இனி, அவைகள் முழுதும் உய்த்து உணர்ந்துவிட்டால், வர்ணாஸ்ரமக் கோட்டையைத் தகர்க்கும் எண்ணத்தையே, அவர் கைவிட்டு விடுவார் !-என்று மித்ரன் எழுதிற்று.

சர் சண்முகம், கலையின் உயர்வுபற்றி, தமிழ்க் காப்பியங்களின் அருமை பெருமை பற்றிப் பேசினாரல்லவா! அதை மித்ரன், தனக்குச் சாதகமாக உபயோகிக்கிறது. வர்ணாசிரமத்தை ஒழிக்கவேண்டுமென்ற எண்ணம் ஒருநோய், தமிழ்க்கலையுணர்வு அதனை நீக்கிடும் ஒரு மருந்து ; மருந்துபோன்ற அந்தக் கலையுணர்வினைச் சர் சண்முகம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு வருகிறார். இன்னும் மருந்தினைச் சற்று அதிகமாகப் பருகினால்,நோயேபோய் விடும், என்ற தொனியிலே மித்திரன், தனது தம்பூரை மீட்டுகிறது. இது வெறும் நாரதகானமாக இருக்கக் கூடும். வர்ணாசிரமம் நோயா, வர்ணாசிரமத்தை

673-3