பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

35


அழகான அந்திவானம்! ஆற்றோரத்திலே நாரை, கவலையுடன். கண்கள் முழுதும் திறந்துமில்லை, முழுதும் மூடியுமில்லை. கபடம் நிறைந்தவிழி, நாரைக்கு. நின்ற கோலத்திலே, தவங்கிடக்கிறது நாரை; சாதாரண ரிஷிகள்போலத் தனது முக்தி கோரியல்ல! ஆற்றிலே துள்ளிக் குதித்து அல்லற்படும் மீன்களுக்கு, முக்தி தர!! எந்த ஆற்றோரத்திலும், பிற நீர் நிலையங்களிலும், நாரை நின்றிடும் இக் காட்சியை எவரும் காணலாம். கல்லெடுத்து வீசிடின், நாரை சென்றுவிடும். ஆனால் கவிதையை வீசி, அந்தக் காட்சி, என்றும் கருத்துள்ளோரின் மனதைவிட்டு அகலாதவண்ணம் ஒருவர் நாரைக்கு "அமரத்துவம்" அளித்துள்ளார். நாரை மீனைக் கொத்தித் தின்பதற்காக, அடக்கமே உருவானதுபோல, அங்குக் காத்திருக்கிறது அதன் தீய எண்ணம் துளியும் வெளியே தெரியாதபடி.நாரை நடிக்கிற நேர்த்தியைக் கவிஞர் காணுகிறார். மீன் தேடிடும் நாரை, ஆற்று நீரிலே இறங்கி அலையக்காணோம், வட்டமிடவுமில்லை, பதைக்கவில்லை; வேறு ஏதோ காரியத்துக்காக, அல்லது வெறும் பொழுதுபோக்குக்காக அந்த ஆற்றோரத்தை அடைந்தது போலப் பாவனை புரிகிறது. அந்த நாரையின் நினைப்பு முழுதும், மீனின் மீது ! நடிப்போ,சர்வ பரித்தியாகத்துக்கும் தயாராக இருப்பதுபோல் ! இதைக் கண்ட கவிஞர், பறவை இனங்களிலே இவ்வளவு கவடம் கற்றதாக நாரை இருப்பதுபோல, மக்களிலே யார் உளர், என்று எண்ணாமலிருப்பரா? கற்றோர்க்கும் மற்றையோர்க்கும், இதுதானே வித்யாசம்! கற்றோர், காட்சியுடன் கருத்தினைப் பிணைப்பர். மற்றையோர்,