பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

37


காலத்திலேயே, ஆரிய இனம், காரியம் பலிக்கக் கவட வேடமிட்டுக் கிடந்தது என்பதற்குச் சான்றுகள் அனேகமுண்டு. இன்றும் அந்த இயல்பு கொஞ்சமும் மாறாது தானிருக்கிறது. நாரைபோல நின்றிருக்கும் நடிப்புத் திறனை அந்த இனத்தவர் செம்மையாகச் செய்வர்.

கலை எனும் அருவியோரத்திலே, ஆரிய நாரைகள் அமர்ந்துள்ளன; கலையருவிக் காட்சியிலே, தம்மை மறந்திருப்பதாகப் பாவனை! முதுமொழி நினைவார் போல, கலையின்பத்தையே நினைத்தவண்ணம், ஆரிய காரைகள் அமர்ந்துள்ளன. இரையும் வேண்டாம் இந்த இன்பமே போதும், என்று கூறுவர்! இதிலுள்ள உண்மையின் உயர்வும், நேர்த்தியும், வேறு எதிலே காணமுடியும் என்றுரைப்பர். வேறொன்று வேண்டாப் பராபரங்களாக, வழிபாடன்றிப் பிறிதோர் பெறத்தக்க பேறில்லை என்ற பெருங் குணவான்களாக, மன இருள், கலை ஒளிபட்ட மாத்திரத்திலே, அடியோடு தொலைந்ததென்று கூறும் ஞானவான்களாக, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று உபதேசிக்கும் உத்தமர்களாக, அறிவு பெரிது, அதனினும் பெரிது அறிவின் பயனாக விளையும் ஆனந்தம், அதனினும் பெரிது, அந்த ஆனந்தத்தை அனைவரும் பெற்றிடச் செய்தல் என்று கூறிடும் ஆசிரியர்களாகக் காட்சியளிப்பர். அவர்தம் நெஞ்சமோ,ஓர் எரிமலை! விழியோ, எவர் உழைப்பை எங்ஙனம் ஏய்த்துப் பெறுவது என்ற தந்திரத்தைக் கக்கும் குழிகள்! அருவியோரத்து நாரையின் நினைப்புத் துள்ளிக் குதித்திடும் மீனினத்தின்மீது ! ஆரிய நாரைகட்கோ, கலையருவியில்