பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்களை ஆடித் தீர்க்கிற போதெல்லாம் - இறந்தகால அனுபவத்தின் நினைவொலியை எனது நுண் உணர்வுகள் மேலுக்கு உந்திவிட்டுவிடும். நான் சோகத்தால் சாம்பிக் குவிய நேரிடும்.

இதோ, சூரத் தாய்க்காக மனித உருவங்கள் துரத்தில் எழுப்புகின்ற அழுகை ஒலி-ஒளியும் இருளும் கலந்து குழம்புகிற விண்வெளியிலே - மிதந்து திரியும் காற்றைத் துணை கொண்டு ஊர் முழுதும் பரவிக் கொண்டிருக்கிறது.

- அன்றும் இதே மாதிரித்தான்

இருபத்திரண்டு வருஷங்களுக்கு முந்தி, ஒரு நாள். அன்றும் "சூரன் குத்து திருநாள்தான். - -

சூரன் பொம்மைக்கும் முருகனுக்குமிடையே பலத்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது இரண்டு "சப்பரங்களுக்கும் நடுவில் நீளமாகக் கயிறு கட்டி, அதில் அங்கும் இங்குமாக வாணத்தைக் கொளுத்திவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் மனிதர்கள். முடிவில், சூரனின் தலை அகற்றப்படும். இப்படி அநேக தடவைகள்.

இந்த விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, வேறொரு பக்கத்தில் வேறு விதமான விளையாட்டு நடிக்கப்பட்டது. "துணிந்த கட்டைகள் சிலர் திட்டமிட்டு நடத்திய நாடகம் அது.

கடைகளின் முன்னே "மறியல் நடந்துகொண்டிருந்த காலம் அது. அந்நியத் துணியை விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்னால் தேசபக்தர்கள் நின்று வருவோர் போவோரிடம் அன்பு உபதேசம் புரிந்து வந்தார்கள். அந்த "மறியல் வேலையை சுவாரஸ்யமானதாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்ட சில "பக்தர்கள் புதுமையான - துணிகரமான வேலைத்தனம் ஒன்று செய்தார்கள்.

ஆட்சி புரிந்துவந்த ராஜப் பிரதிநிதியின் பொம்மை ஒன்றைச் செய்து "சூரன் வாறான் - சூரன்" என்று கூவியவாறு கடைத் தெருவுக்குச் சுமந்து வந்தார்கள். பெரிய ஜவுளிக் கடை ஒன்றின் முன்னால் அதை இறக்கிவைத்து, அதன் நெஞ்சிலே வேல்கம்பைச் சொருகிவிட்டு ஒட்டம் பிடித்தார்கள் செயல் புரிந்தவர்கள்.

அவர்கள் ஓடியதற்குக் காரணம் போலீஸ் வீரர்கள் குண்டாந்தடியோடு விஜயம் செய்ததுதான். வீரர்கள் வந்ததும்,