பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12th பொம்மைகள் - அணிவகைகளும் வாங்கிக்கொடுக்க முடிகிற தந்தை பெரும் பணக்காரனாகத்தான் இருக்கவேண்டும். அல்லது மிகுதியாகப் பணம் பண்ணும்திறமையும் அதற்கு வகை செய்யும் பதவியும் பெற்றவனாக இருத்தல் வேண்டும். -

அம் மூன்று பெண்களும் அந்தியிலே பூத்தொளிரும் மந்தாரைகளாக விளங்கினார்கள். முன்னிரவிலே ஒளி மழையில் குளித்துப் பளிச்சென மிளிரும் மத்தாப்புக்களாகத் திகழ்ந்தார்கள். ஒரு தர்ம் பார்த்தவரின் விழிகளை மீண்டும் மீண்டும் தம் பக்கம் கவர்ந்திழுக்கும் காந்தமலர்களாக ஜிலுஜிலுத்தார்கள்.

அவ்வீட்டிலே பொழுதுக்கும் பாட்டு பொழுதெல்லாம் சங்கீதம்' அவர்கள் முகத்திலே ஓயாத மலர்ச்சி. அவர்களைச் சுற்றிலும் எப்போதும் கலகலவெனச் சிதறுகின்ற களி துலங்கும் நகைப்பு. அவர்களுக்குக் கவலை எதுவும் இருக்காது என்றே தோன்றியது.

ஆமாம். இருக்க முடியாது தான் மனித உள்ளமும் தர்ம உணர்வுகளும் விசாலப் பார்வையும் பெற்றிருப்பவர்களுக்குத்தானே வீண் கவலைகளும்-வேண்டாத குழப்பங்களும்-அடிக்கடி ஏற்படக்கூடும். -

"நவராத்திரி"யின் மூன்றாவது நாள். மாலை வேளை.

பொம்மைகள் வாங்குவோர் இன்னும் வாங்கிக் கொண்டு. தானிருந்தார்கள் மூவரில் மூத்தவளுக்கும் வாங்கும் ஆசை குறைந்து விடவில்லை. -

அவள் வீட்டின் ஒரு அறையில் தரையிலிருந்து முகட்டைத் தொடும் வரை பல படிகள். படிகள்தோறும் தினுசு தினுசான பொம்மைகள். அந்த அறையே பொம்மைக் கடை மாதிரிப் பிரகாசித்தது. ஆயினும் அவள் மேலும் ஒரு பொம்மை வாங்க விரும்பினாள். -

நம்பி ஒருவன் நங்கை ஒருத்தியை ஆர்வத்தோடு அனைத்திட வேகமாகப் பிடித்திழுக்கும் ஒரு தோற்றம் அற்புதமான படைப்பு உணர்வுத் துடிப்பும் ஜீவகளையும், எழில் மலர்ந்த வளைவு நெளிவுகளும் எழுச்சி வீழ்ச்சிகளும் பெற்ற பொம்மை.

அவள் பார்வையில் பட்ட அது உள்ளத்தையும் தொட்டது. அப்புறம் வாங்காதிருக்க முடியுமா, அவளால்? - -