பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 121 வாங்கி, அகமும் முகமும் மலர. பெருமையாகச் சுமந்து வந்து அதைக் காரில் வைத்தாள். ஒயிலாகச் சோம்பல் முறித்தாள்.

அவ்வழியே வந்த லேம்பிரட்டா கார் அருகில் நின்றது. அதில் ஜம்மென்று சவாரி செய்த யுவன் "ஹல்லோ பர்சேஸிங்தானா?" என்றான்.

அவள் சிரிப்பைப் பதிலாக அளித்தாள் அவனுக்கு.

அவன் பொம்மையைப் பார்த்தான்."ஒண்டர்புல். ஸுப் பர்ப்.பியூட்டிபுல்.ரொம்ப ஜோர்" என்று அடுக்கினான். "விலை என்ன?” -

"நாற்பது ரூபாய்"

"ஃபார்ட்டி ருபீஸ்?" என்று சொல்லி, தன் புருவங்களை உயர்த்தினான் அவன்.

"இதென்ன பிரமாதம் ஒரு கடையிலே புதுசா ஒரு பொம்மை பார்த்தேன். ஜோரா கரடி ஒண்னு ஒரு கையிலே கொக்கோ கோலாபாட்டில், இன்னொரு கையில் ஒரு கப், நாம் தொட்டால், அது பாட்டிலைத் தணித்து, கப்பில் ட்ரிங்கை ஊற்றி, நம் பக்கம் நீட்டும்.வெரி வெரி சார்மிங் திங். விலை வந்து.நூத்தி முப்பதோ என்னவோ!"

"ஒரு பொம்மைக்கா அவ்வளவு விலை?" என்றான் மைனர்.

"அந்த ரூபாயைக் கொடுத்து அந்த பொம்மையை வாங்கிப்போய் விட்டார்கள் தெரியுமா? இரண்டு மூணு பொம்மைகள் விலை போய் விட்டதாகக் கடையிலே சொன்னான். நான்கூட ஒண்னு வாங்கலாம்னு எண்ணினேன். இந்த வருஷம் வேண்டாமேன்னு தோணிச்சு. விட்டுட்டேன்" என்றாள் சிங்காரி சிரித்தாள் காரில் ஏறினாள்.

ரோமியோவின் லேம்பிரட்டா பின்தொடர, அந்த ஜூலியட்டின் கார் வேகமாக நகர்ந்தது.

அவர்கள் சம்பாஷ்ணையைக் கேட்டு நின்றான் ஒருவன். ஒரு வாரமாக கூடிவரம் செய்யப்படாத முகத்தில் நீண்டு நின்ற மயிர்க்கட்டைகளை விரல்களால் சொறிந்தான். தலையைத் தடவினான். பொங்கி வந்த பெருமூச்சை அடக்க முடியவில்லை அவனால். அவனுக்கு ஒரு குழந்தை உண்டு. உயிருள்ள பொம்மை போன்ற