பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 137 வேளைகெட்ட வேளைகளில் எல்லாம் - விந்தைச் சிலந் அவனது அடர்ந்த கரிய தலைமூடியினூடே புகுந்து விளையாடுவது போன்ற உணர்வு பெற்று அவன் திடுக்கிட்டு எழுவான். மயிர் கொட்டி, விடவும், மண்டையில் அங்கங்கே சொட்டை விழுந்து விகாரத் தோற்றம்பெற்று விட்டதுபோல் அவனுக்குப்படும். உடனே விளக்கை ஏற்றி. கண்ணாடி முன் நின்று ஆராய்ச்சி செய்வான் அவன்.

- டாரன்ச்சலா" என்ற இனத்துப் பூச்சிபற்றி அவன் அறிந்தது முதல், சிதம்பரத்தின் மனப்பித்து மோசமான நிலை எய்தியது.

டாரன்ச்சலா இனச் சிலந்தி பெரியது. மயிர் செறிந்தது. விகார உருவம் பெற்ற இது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் விஷம் உடையதல்ல. இத்தாலியிலும் ஐரோப்பாவின், வேறு சில நாடுகளிலும் காணப்படுகிற இந்தச் சிலந்தியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு நாட்டியம் ஆட வேண்டும் என்ற வெறி பிறக்குமாம். அவர்கள் அந்த உணர்வுதீருகிற வரை வெறியாட்டம் ஆடவேண்டியது தான்.

சிதம்பரம் இந்த இனச் சிலந்தியை நேரில் காணும் வாய்ப்ட பெற்றவனல்ல. அதன் படத்தை மட்டுமே கண்டிருந்தான். ஆயினும் டாரன்ச்சலா அவன் மூளையில் ஒரு பகுதியில் குடியேறி விட்டது

அந்தப் பெருஞ்சிலந்தி அவனைக் கடித்து விட்டது போலவும். "ஆடு எழுந்து குதித்து, கூத்தாடுடா பயலே என்று உத்திரவிடுவது போலவும் உணர்வு எழும் அவனுக்கு. .

ஒன்றிரண்டு தடவைகள் அவன் எழுந்து நின்று "திங்கு திங்கென்று குதித்துக் கூத்தாடவும் செய்திருக்கிறான். நல்ல வேளை அச்சந்தர்ப்பங்களில் அவன் தனியனாய் தனது அறையிலேயே இருந்தான். வேறு எங்காவது இருந்திருந்தால் அவனுக்குப் பைத்தியம் என்றே மற்றவர்கள் முடிவு கட்டியிருப்பார்கள்.

அவனுக்குப் பைத்தியம் 57ETಗ್? அல்லது பைத்தியத்தின் ஆரம்ப நிலையா? பைத்தியத்தின் வித்து விழுந்து மனம் சிறிது சிறிதாகப் பேதலித்து வரும் தன்மையோ? அறிவு மயக்கமும் தெளிவும் மாறி மாறி வரும் நிலமையாக இருக்குமோ? . . . திட்டமாகச் சொல்வதற்கில்லை. எதுவாகவும் இருக்கலாம்.

- எதுவும் இல்லாது. வேறு குழப்பமாக இருந்தாலும் இருந்து விடலாம். மனித உள்ளத்தின் சிக்கல்களை யார்தான் எளிதில் விடுவிக்க

முடிகிறது?