பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- - வல்லிக்கண்ணன் 圈_圈_17 செய்ய முன்ைவதும் "சிருஷ்டித் தொழில்தான். ஆனால், இலக்கிய சிருஷ்டியில் ஈடுபடுகிறவனுடைய தன் மயமும் தனிமையும் தனிரகமானவை. அது வேதனை. அது சுமை. தானேயாகித் தனித்திருந்த கடவுள் அந்தத் தனிமையை-வேதனையை-சுமையைத் தாங்கமாட்டாமல்தான் உலகத்தைப் படைத்து களிப்பதை "அலகிலா விளையாட்டு" ஆகக் கொண்டுவிட்டான். .

இருள் பரவத் தொடங்கியது எங்கும்.

ரஸ்தாவின் பரபரப்பு வடிந்து விடவில்லை. பொழுது போக்குவதற்காக அசைந்தவர்களும், காதல் மோப்பம் பிடித்து நடந்தவர்களும், ஜோடிகளும், நண்பர் குழுக்களும், தனி மனிதர்களும் அப்படியும் இப்படியும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகே, அவர்களைப் பார்த்தபடி, அவர் இருந்தார். ஆனாலும் அவர்களை விட்டு வெகு தொலைவில் எங்கோ வழி தவறி நிற்பது போன்ற உணர்வுதான் அவருக்கு இருந்தது. அப்பொழுது மட்டும்தான் என்று சொல்வதற்கில்லை. எப்பொழுதுமே அபபடித்தான்.

அவரது கண் தூண்டில் ஒரு உருவத்தின் மீது குத்தியது. அதனால் உறுத்தப்பட்டவள் போல அவளும் திரும்பி அவரைப் பார்த்துவிட்டுப் போனாள். நாகரிக மைனர் ஒருவனைத் தொடர்ந்து நடந்தாள் அவள்.

எலிப் பத்தயம், எலிப் பொறி, "எலி போன்" என்றெல்லாம் இருப்பதுபோல "மேன்ட்ரேப் (Man-trap) என்பதற்கும் தமிழில் ஒரு பதம் தேவை. இந்த மாதிரிப் பெண்களைக் குறிப்பிடுவதற்கு இவள் சரியான "ஆள் பிடிக்கி"தான். இவளுக்குப் பணத் தேவை அதிகம் இருக்கும்போலும். பணத்தேவை என்பது யாருக்குத்தான் இல்லாமல் போய்விட்டது?

இருள் நன்றாகக் கவிந்துவிட்டது. தெருவிளக்குகள் ஒளி சிந்தி மின்னின. பகட்டையும் பரபரப்பையும் பேரொளியையும் விட இருட்டே மனசுக்கு இதமாக இருக்கும் என்று தோன்றியதனால், ஞானப்பிரகாசம் எழுந்து நடந்தார். இருள் மலிந்த கடற்கரை மணல் பரப்பில் ஒரு இடம் கண்டு அமர்ந்தார்.

தூரத்தில் ஒளியும் இருளும் "கண்ணாம்பூச்சி விளையாடி மகிழ்வது போல் ஒடித் திரிந்துகொண்டிருந்தது. தீபஸ்தம்பச் சுழல்