பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


"நடக்குமாயின்னு மெதுவாக்கேக்கிறீங்களே! நடக்குது எசமான், நடந்துகொண்டே இருக்குது. இந்த உலகத்திலே என்னென்ன அநியாய மெல்லாமோ அதிசயமெல்லாமோ நடக்குது. எவ்வளவோ சங்கதிகளை நம்மாலே புரிஞ்சுகொள்ள முடியலே என்றான்

மாணிக்கம், "உங்களுக்கு சந்தேகமிருந்தால் மாடசாமியிடம் கேட்டுப்

பாருங்கள். நாளைக்கு நானே அவனைக் கூட்டிவாறேன் என்றும் கூறினான்.

மறுநாள் மாடசாமி வந்து சேர்ந்தான். அவ்வூர் அம்மன் கோயில் பூசாரி அவன், விபூதி மந்திரித்துப் போடுதல்", "திருவிளக்கு மை

வைத்து நடந்தது-நடக்கப் போவது எல்லாம் அறிந்து சொல்லுதல்"

போன்ற வித்தைகளையும் அவன் ஒரு சிறிது கற்றிருந்தான். அதனால் அவனுக்கு நல்ல செல்வாக்கும், திருப்திகரமான வரும்படியும் கிடைத்தன.

அவன் வந்தான். "மை போட்டு'ப் பார்த்தான். "இதெல்லாம்

-

சூனியக்காரன் ஒருவன் செய்கிற வேலைதான்" என்று சொன்னான்.

அதற்கு மாற்று வைக்கும்படி மாணிக்கம் வேண்டிக் கொள்ளவும் மாடசாமி பணிவுடன் தலை அசைத்தான்.

“எனக்கு அவ்வளவு தூரத்துக்கு சக்தி இல்லை. இது மாதிரி மந்திர தந்திர வேலைகள், சூனியம் வைப்பது. வைத்ததை எடுப்பது. செய்வினை வைத்திருந்தால் அதை முறிக்கத் தகுந்த நடவடிக்கைகளைக் கையாள்வது முதலியவற்றுக்கெல்லாம் மலையாளத்து மந்திரவாதிள்தான் கைகாரர்கள். எனக்கு அவ்வளவாக ஞானம் பற்றாது என்று சொன்னான் அவன்.

"அது சரி. இந்தப் பண்ணி கண்ணிலே படாமல் இருக்கணு மின்னா என்ன செய்யவேண்டும்?" என்று சூரியன்பிள்ளை கேட்டார்.

“உங்க பண்ணையிலே வேலைசெய்கிற ஆட்களிலே ஒருவனேதான் இதுக்கு மூலகாரணம். நீங்க ஒண்ணு பண்ணுங்க, கொதிக்கக் கொதிக்க வெந்நீரை ரெடியா வச்சிருங்க. அந்தப் பண்ணி கண்ணிலே படும்போதெல்லாம் வெந்நீரை அள்ளி அது மேலே வீசி அடியுங்க பயப்படாமே - என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று கவலைப்படாமல் - வெந்நீரைக் கொட்டிக்கொண்டே இருங்க. அப்புறம் என்ன-நடக்குதோ, பார்ப்போம்" என்று மாடசாமி வழி வகுத்துக் கொடுத்தான்.