பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்ல காரியம் | நடைதான். அவள் வீட்டுக்கும் கல்லூரிக்கும் இரண்டு மைல் தூரம் இருக்கலாம். அவள் மழை என்று பயப்படுவதில்லை. வெயில் என்றும் தயங்குவதில்லை. நடப்பதில் இன்பம் காண்பவள் போலும், அவள் நடக்கவில்லை. எங்கோ ஏதோ பறிபோவது போல, அல்லது எதையோ பறி கொடுத்துவிட்டுப் பதறி ஓடுகிறவள் போல், வேகம் வேகமாக நடந்தாள். ஆகவே, பஸ்ஸுக்குக் கொடுக்க அவளிடம் காசு கிடையாது என்று எண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

"இரண்டு வார காலம் எனது நண்பன் கொழுக்கட்டையை நான் சந்திக்க முடியவில்லை. மறுமுறை அவனைப் பார்த்தபொழுது அவனாகவே அந்தப் பெண்ணைப் பற்றிய பேச்சைத் தொடங்கினான். அவள் மற்ற நவயுவதிகளைப் போன்றவள் அல்லள். அவள் சினிமாவுக்குப் போவதே இல்லை. பணத்தைப் பிடுங்குவதற்காக ஏற்பட்ட எந்த இடத்தின் அருகிலும் அவள் செல்வதில்லை. உல்லாச உணவு விடுதிகளுக்கும் அவள் போவதில்லை.

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது என்று நான் அவனைக்

கேட்டேன். -

"அவனோ தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான்

"நான் அவளை முன்பு எங்கோ பார்த்திருப்பதாக நினைக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அது எந்த இடம் என்பது எனக்குத் தெரிந்து விட்டது. பம்பாய் நகரத்தின் "சிகப்பு விளக்குப் பிராந்தியத்தில் தான். உடலின் உணர்வுப் பசியால் தவிப்பவர்களுக்கு தங்கள் உடல்களை வாடகைக்கு விட்டுத் தமது பணத்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் பெண்கள் வசிக்கிற வட்டாரத்திலே தான்." அங்குள்ள விபசார விடுதி ஒன்றிலே தான் அவன் அவளைக்

乐、_s邸。

"முதலில் என்னால் இதை நம்பமுடியவில்லை. எப்படி ஐயா நம்பமுடியும்?" தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்ற கொள்கை உடையவள் போல தினந்தோறும் கல்லூரிக்குப் போய் வருகிற ஒரு இளம் பெண்ணை, "மெய் வருத்தம் பாரார். பசி நோக்கார்" என்ற தன்மையில் "கருமமே கண்ணாகி இயங்கிய நவயுவதியை இரவு நேரத்தில் விபசார விடுதியில் தொழில் செய்யும் ஆளாகக் கண்டேன் என்று ஒருவன் சொன்னால், நான் அதை எப்படி நம்ப முடியும்? இல்லை. யாரால் தான் நம்ப முடியும் அதை?