பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ காட்டிக் கொடுத்தவன்

அவர் செய்யப்போகிற வேலைகளைப் பற்றியும் நேரடியான கேள்விகள் மூலமும் சுற்றி வளைத்துப் பேசியும் கேட்டுத் தெரிந்து கொண்டான். . -

அவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது தாமோதரனுக்கு அவன் பேரில் சந்தேகம் எழத்தான் செய்தது. முன்புகூட சில சந்தர்ப்பங்களில் அவனது பேச்சிலும் பார்வையிலும் கள்ளத்தனம் கலந்து கிடந்ததாக அவருக்குத் தோன்றியது உண்டு. சந்தேகம் கொடிய தொத்து நோய். அது யாரையும் எளிதில் பற்றிக்கொள்கிறது என்று அவர் ஆத்ம உபதேசம் செய்து கொள்வதும் வழக்கம்தான். இன்று அத்தகைய சுயபோதனை கூட அவருக்கு அமைதி அளிக்கத் தவறிவிட்டது.

கேசவன் போன பிறகு யார் யாரோ வந்தார்கள். அவருடன் விளையாடிப் பொழுது போக்கவரும் குழந்தைகள் வந்தன. விளையாடின. அவற்றின் பேச்சும் விளையாட்டுக்களும் கூட அவருக்கு மன அமைதி தரவில்லை. இன்று ஏதோ நேரப் போகிறது" என்று உள்ளுணர்வு அரித்துக் கொண்டே இருந்தது. "ஏதாவது ஆபத்து வரலாம்" எனத் தோன்றியது. * அதற்காக அவர் வழக்கமான அலுவல்களைச் செய்யாமல் சோம்பிக் கிடக்கவில்லை.

சோம்பி இருக்கும் சுகம் அறியாத காலமும் ஒடிக்கொண்டுதான் இருந்தது.

பொழுது மயங்கி அந்தி வந்தது. அதை விழுங்கிவிட்டு இருள் வளர்ந்தது. -

இரவு அடி எடுத்து வைத்ததும், வெளியே சிறிது தூரம் உலாவி விட்டு வருவது தாமோதரனின் பழக்கம்.

அன்றும் அவர் வழக்கம்போல் வெளியே போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வானத்து அதிசயங்களையும், வயல் வெளியில் காற்றிடையே தலையசைத்து நிற்கும் பசும் பயிர்களின் அழகு இரவின் கருமையில் கலந்து மடிவதையும், மரங்களும் வீட்டுக் கூரைகளும் கோயில் கோபுரமும் கரிய புகைப் புலனில் நிழல் உருவங்களாக மாறிவருவதையும் ரசித்தபடி நடந்தார் அவர் "இயற்கை எப்பொழுதும் வசீகரமாகத் தான் இருக்கிறது என்றது அவர் மனம்