பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 1989 இறுதியில், லோகசக்தி சார்பில் சக்தி தாசன் தென்ஜில்லாக்களில் சுற்றுப் பயணம் செய்த போது, ாமநாதபுரம் ஜில்லா பரமக்குடிக்கும் வந்தார். அப்போது நான் அங்கே குமாஸ்தாவாகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். தான் சந்தித்த முதல் சென்னைப் பத்திரிகை ஆசிரியர் சக்திதாசன் சுப்பிரமணியன்தான். அவர் உற்சாகத்தோடும் உணர்ச்சி வேகத்தோடும் இருந் தார். சென்னை நகர வாழ்க்கைப்பற்றியும், பத்திரி கைகள் மற்றும் பத்திரிகைக்காரர்கள் குறித்தும் நிறையவே சொன்னார். நான் சென்னை சேர்ந்தால் பத்திரிகைத் துறையில் வளர்ச்சி பெற வாய்ப்புகள் கிட்டும் என்றும் அவர் பேச்சோடு பேச்சாகச் சொல்லி வைத்தார். பரமக்குடியில் இரண்டு வருடங்கள் வசித்த பிறகு உத்தியோக ரீதியில் தான் திருநெல்வேலி ஜில்லா பூரீவைகுண்டம் ஊருக்கு மாற்றப்பட்டேன். பரமக்குடி ஆபீஸ் சரியான சோம்பல் நிலைய மாக இருந்தது. பெரும்பாலான காலங்களில் அங்கே மேலதிகாரியே இருக்கமாட்டார். அந்தத் தனிமைச் சூழ்நிலை எனக்கு மிக வசதியாக உதவியது. படிப்ப தற்கும் எழுதுவதற்கும். துவைகுண்டம் ஆபீசிலும் வேலை அதிகம் இருந் ததில்லை. ஆனால் அங்கிருந்த ஆபீசர் தொல்லை தரும் டைப் ஆக இருந்தார். அவர் தந்த தொந்தரவு களை சகித்துக் கொண்டு அங்கும் இரண்டு வருட காலம் குமாஸ்தாவாக நான் பணி புரிந்தது பெரிய காரியம்தான்,