பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வல்விக்கண்ணனின் போராட்டங்கள் காலத்தில் அரசியல் காரணங்களால் அது நிறுத்தப் பட்டிருந்தது. துறையூர் பூர்ணம் பிள்ளை என்பவர் முதலில் அதை ஆரம்பித்து, ஆசிரியராக இருந்தார். அவர் மரணத்துக்குப் பிறகு திருலோக சீதாராம் அதன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருந்தார். பத்திரி கையின் நிர்வாகப் பொறுப்பு லிமிட்டெட் கம்பெனி வசம் ஒப்புவிக்கப்பட்டது. - . கிராம ஊழியன் பிரஸ் லிமிட்டெட்டின் செய லாளராக அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் பொறுப்பு வகித்தார். அவர் இலக்கிய ஆர்வம் உடை யவர். பாரதியிடம் ஈடுபாடு கொண்டவர். கவிதை எழுதுவதில் அக்கறை காட்டினார். 1942 முதல் திருச்சியில் நடைபெற்று வந்த "கலா மோகினி அவர் கவனத்தைக் கவர்ந்திருந்தது. திருலோக சீதாராம் துணையினால் வி. ரா. ராஜ கோபாலன், ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா., சிட்டி ஆகி யோர் தட்பு அவருக்குக் கிட்டியது. "கலா மோகினி' இலக்கியச் சூழ்நிலையின் தாக்கம் காரணமாக, தாங்களும் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த வே ண் டு ம் என்ற அவா திருலோகத்துக்கும் அ.வெ.ர.கி.க்கும் ஏற்பட்டு வளர்ந்தது. இரண்டாவது உலக மகாயுத்த காலம். காகிதக் கட்டுப்பாடு அமுலில் இருந்தது. புதிய பத்திரிகைகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி மறுத்துக் கொண் டிருந்தது. - அதனால் கிராம ஊழியன் பத்திரிகையையே "கலா மோகினி மாதிரி மாதம் இருமுறை இலக்கியப் பத்திரிகையாக மாற்றுவது என அவ்விருவரும் தீர் மானித்தனர்.