பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ் வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் எழுதுங்க. நீங்க போறதுக்கும் வாறதுக்கும் வேண்டிய வசதிகளை, செளகரியங்களை நாங்க செய்து தாறோம் என்று டைரக்டர் சாமி அறிவித்தார். அவ் வார்த்தைகளும் என்னை கவர்ச்சிக்க வில்லை. 'இல்லே. அப்படிச் செய்ய முடியாது. நான் முழு நேரமும் இலக்கியப் பத்திரிகைக்காக உழைக்கவே விரும்புகிறேன். சினிமாத்துறை எனக்கு சரிப்படாது என்று திட்டமாகக் கூறி விட்டேன். . . . ." 'நல்லா யோசியுங்க. இதுமாதிரி சான்ஸ் உங்க ஞக்கு வரவே வராது. ஆறு ஜூபிடர் படங்கள்; முருகன் டாக்கீஸ் படம் ஒண்ணு. பணம் நிறையக் கிடைக்கும். பேரும் வரும். அப்புறம் சான்சுகள் 1.க்களை தேடி வரும் என்று அவர் ஆசை காட்டினார். 'நீங்க இதை ஒப்புக் கொள்ளலாம்னுதான் எனக்கும் தோணுது என்று சண்முகம் சொன்னார். "சினிமாவுக்கு வசனம் எழுதணும் கிற எண்ணமே எனக்கு இல்லை என்று நான் உறுதியாய் அறிவிக்கவும், அவர்கள் மவுனமாகி விட்டார்கள். 'உருப்படாத கேஸ்' என்று அவர்கள் எண்ணி யிருப்பார்கள். கிராம ஊழியன் வளர்ச்சி ஊழியன் ஆண்டு மலர் வெளியான சில மாதங் களுக்குப் பிறகு, திருலோக சீதாராம் ஊழியன் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்,