பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 73 இடைக்காலத்தில் என் அண்ணாவும் நானும் ஆங்கில நூல்களை அதிகம் வாங்க ஆரம்பத்திருந் தோம்.மாடர்ன் லைபிரரி, திங்கர்ஸ் லைபிரரி, ஒர்ல்ட் க்ளாஸிக்ஸ், பெங்குவின் வெளியீடுகளை மேலும் அதிவேகமாக வாங்குவதற்கு சென்னையில் வசதி ஏற்படும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. இச் சமயத்தில் எம்.கே. டி. சுப்பிரமணியம் என்ப வரின் துரண்டுதலும் சேர்ந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ் நாட்டில் திராவிடக் கழகப் பத்திரிகைகள் வேகமாகவும், எண்ணிக்கையில் அதிகமாகவும் தோன்றிக்கொண்டி ருந்தன உற்சாகிகள் புதிது புதிதாகப் பத்திரிகைகள் ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட உற்சாகிகளில் ஒருவரான எம்.கே.டி.சுப்பிரமணியம் தீப்பொறி' என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகை நடத்த ஆசைப்பட்டார். அதற்கு கோர நாதனை ஆசிரியராக்க விரும்பினார். கோரநாதன் எழுத்துக்களுக்கு தமிழ்நாட்டில் அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. சிந்தனைக் கருத்துக்களை சூடாக உணர்ச்சி செறிந்த நடையில் தந்தன கோர நாதன் எழுத்துக்கள். அந்தச் சூழ் நிலையைப் பயன்படுத்தி கொள்ள எம். கே. டி. எஸ். விரும்பினார். எனக்கு எழுதினார். துறையூர் அச்சுத் தொழில் தோழர்களும் ஊக்க மூட்டினார்கள். என்ன கெட்டுப் போகப் போகிறது! கம்மா இருப்பதைவிட, பரபரப்பு ஏற்படுத்தக்கூடிய இந்த