பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 காப்பி சுவை உடையது. சோர்வகற்றுவது . ஆனந்தம் அளிப்பது. தூக்கம் போக்குவது. ஊக்கம் கொடுப்பது. துக்கத்தை ஆவியாக மாற்றி ஓடச் செய்வது. இன்பத்தை கதகதப்பாக தேக நரம்புகளில் கிளுகிளுக்கச் செய்வது. காப்பியே அழுதம். அதுவே சொர்க்கம். அதுவே சக்தி; அதுவே சிவம். காப்பியே காதல் இன்பம், காதல் இனிமையை விடச் சிறந்தது காப்பி. அழகியின் வனப்பை விடச் சுவையானது அவள் பேச்சை விட ரசம் மிக்கது. அது கன்று. அது இனியது. அது வாழ்க! காப்பிக்கொட்டை தெய்வம், காப்பிப்பொடி சக்தி. பால் தெய்வம், தண்ணீர் சக்தி. தீ தெய்வம். சர்க்கரையும் அஃதே. காப்பியே கண்கண்ட தெய்வம். அது கன்று. நன்மை பயப்பது. அது இனியது இன்பம் தருவது. எங்கும் வியாபித்திருப்பது. இன்பம் பொங்க ஜீவன் அளிப்பது. அதை நாம் வாழ்த்துகிறோம்; வணங்குகிறோம்: போற்று கிறோம்.