பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் பெற்ற அடிகளார் & #38 அரிசிச் சோறு, சாம்பார், தயிர் வகையறாக்களை வேண்டாமென்று அடிகள் ஒதுக்கிவிட்டார் என்பது உண்மைதான், ஆனால், அவர் உள்ளே தள்ளிக் கொண்டிருந்த பதார்த்தங்ளோ? கமலா ஆரஞ்சு, ஆப்பிள், கொடிமுந்திரிப்பழம், பாதாம் அல்வா. கோதுமை அல்வா, பால், வேர்க்கடலை, பாதாம் பருப்பு, தக்காளிப்பழம் - இந்த ரீதியில் அமைந்திருந்தது அவர் உணவுத் திட்டம். அடிகள் வெறும் தண்ணிரை அதிகம் பருகுவதில்லை. ஆரஞ்சுச்சாறும், தக்காளிரசமும் விரும்பிக் குடித்தார். மூன்று வேளைகள் மட்டுமே ஆகாரம் எனும் குறுகிய நியதி அடிகளிடம் இல்லை. ஒன்றுமாற்றி ஒன்று ஓயாத தீனி என்கிற நடை முறைதான் அனுஷ்டானத்தில் இருந்தது. ஹோ இப்படித்தின்பதானால் நான் கூடச் அரிசி சோற்றை தியாகம் பண்ணத் தயார், நான் மட்டும் என்ன? எந்தச்சுப்பனும் ஒ ரெடி என்று முன்வந்து விடுவான்' என்று நாவன்னா நினைத்தார். பிறரிடையே நிலவும் அறியாமைக் காக அனுதாபப்பட்டார். 'சாப்பிடாத சாமியார் சோறு சாப்பிடாத சாமியார்' என்ற புகழ்தான் வேகமாகப் பரவியதே தவிர, வாய் மூடாத ஹல்லர் மிஷின் இவர் தீனி பல ரகம் சதா அரையல் ஆகிக்கொண்டே இருக்கிறது. என்பதை ஒலிபரப்ப பக்த பரம்பரை ஆர்வம் காட்டவில்லை. இதை எண்ணியும் ந.நா. வருத்தப்பட்டார். திருச்சிற்றம்பலத்தடிகள் பண்ணுகிற பூஜைகளைப் பற்றி ஊரேபிரமாதப்படுத்தியது. அவர் பக்திப்பாடல்களைப் பாடுகிறபோது கசிந்து உருகிக் கண்ணிர் வடிக்கிற பெருமையைப் புகழாதவர்கள் கிடையாது. அருள்பெற்ற அடிகளார்' என்று தான் பலரும் வியந்தார்கள். இச்செய்திகள் பரவிய வேகத்திலேயே மற்றுமொரு சேதியும் சிறகடித்துப் பறந்தது எங்கும். அடிகள் வந்தசேர்ந்த மூன்றாம் நாள் காலையில் அது பரவியது. இரவோடு இரவாக இருள் போல் ஒடுங்கிவிட்டார் திருச்சிற்றம்பலத் தடிகள் எனும் உன்மையே அது.