பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியின் இ * 170 என்ற நினைப்பு தந்த கர்வத்தோடு, பெருமித மிடுக்கோடு, தலை கனத்துத் திரிந்தேன். அந்த வெற்றியே என்னுடைய தோல்வி என்பதை நான் உணர்ந்துகொள்வதற்குச் சிறிது காலம் பிடித்தது. நான் விரும்பியது என்ன? என்னை அலட்சியப்படுத்திய ஆணவக்காரனையும் அவனது புகழையும் நிர்மூலமாக்கிவிட வேண்டும் என்பது தானே? அவன் இறந்துவிட்டான்; அவன் நிர்மாணித்த அழகு நகரம் சிதைந்து சீரழிந்து போயிற்று, அவன் போற்றிக் காதலித்த கலைமய சிருஷ்டிகள் எல்லாம் குலைவுற்றன என்பது சரிதான். ஆனால், அந்தச் சிதைவும் சீர்குலைவும் குறைபாடுகளுமே அவற்றின் சிறப்புக்களாகி விட்டன, காலப்போக்கிலே, காலம் என்னை வஞ்சித்துவிட்டது! அழிவுக்கு இலக்கான நகரமும் கட்டிடங்களும் அழிந்தும் அழியாத நிலையிலே நின்று, அமரத்துவமான சிறப்பைப் பெற்று விட்டதனால்தானே இந்த இடத்தையும் இங்கு உள்ளவற்றையும் கண்டு போவதற்காக ஆட்கள் வருகிறார்கள் ? ஆராய்ச்சிக்காரர்களும், கலைரசிகர்களும், படம் பிடிப்பவர்களும், ஒவியம் எழுதுகிறவர்களும், பொழுது போகாமல் ஊர் சுற்றுகிறவர்களும் பிறரும் அடிக்கடி வந்து போகிறார்களே. இப்படி ஒரு சிறப்பு இந்த இடத்துக்கு வந்து சேரும் என்று நான் கனவில்கூட நினைக்க முடிந்ததில்லையே! இந்த இடம் பெற்றுவிட்ட வெற்றி எனக்குத் தோல்வி அல்லாமல் வேறு என்ன?” இந்தப் பேச்சு நியாயமானது என்றே எனக்கும் தோன்றியது. "வாஸ்தவம் தான்” என்று முனகினேன் நான். "இந்த உண்மை எனக்குப் புலனான உடனேயே நான் செத்துப் போனேன். ஆனால், என்னுடைய ஆத்மா அமைதி அடையவே இல்லை. தினந்தோறும் நான் இங்கு வந்து, எனது வெற்றியையும், வெற்றியிலேயே பின்னிப் பிணைந்து கிடந்த தோல்விகளையும் எண்ணிப் பார்ப்பது வழக்கம். எப்பொழுதாவது, உன்னைப்போல் என் மனசுக்குப் பிடித்தவர் யாராவது வந்தால்-எனது ரகசியத்தை அவர்களுக்கு அறிவிக்கலாம் ೯೯೯ಕp எனக்குத்