பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 9 శ |வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | எனவே, அவன் மாணவனைத் தேடிப் போனான். ராமமூர்த்தி ஒரு நாள் ட்யூஷன் தவறி விட்டதற்காக வருத்தம் கொள்ளவில்லை. அடிக்கடி வாத்தியார் வராம லிருந்தால் கூட அவன் வருத்தப்பட மாட்டான். ஆனால் கல்யாணிக்கு அப்படி இல்லை! கைலாசம் வந்து விட்டான் என்பது தெரிந்ததும் அவள் வெளியே எட்டிப் பார்த்தாள். முன்னால் வந்து நின்று, "நீங்க நேற்று ஏன் வரவில்லை?” என்று கேட்டாள். "பணம் கொடுக்கிறோம். நீ எப்படி வராமல் இருக்கலாம்? என்ற அதிகாரத்தோடு அவள் கேட்பதாகத் தோன்றியது அவனுக்கு, என் இஷ்டம் வருவேன்; அல்லது வராமல் இருப்பேன் என்று கடுகடுப்பாகக் கூற வேண்டும் என ஆசைப்பட்டான் அவன் என்றாலும், "வரமுடியலே. நேற்று வேறு வேலை இருந்தது” என்று சொல்லி வைத்தான். ஊம்ம் என்று கேட்டுத் தலை அசைத்து விட்டு உள்ளே போனாள் கல்யாணி, அரை மணி நேரம் சென்ற பிறகு அவள் வெளியே வந்தபோது அவளுடைய தோற்றமே மாறியிருந்தது! கட்டியிருந்த பாவாடை தாவணியை மாற்றி விட்டு, புதிய ஸில்க் சேலை உடுத்து சிங்காரித்துக் கொண்டு சிரித்தபடி வந்து காட்சி அளித்தாள் அவள். ஒகோ! நேற்று இவள் இந்தத் திருக்கோலம் காட்டி மகிழ வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள் போலும் ஏமாந்து விட்டாள். அதனால் தான் அவள் என்னை ஏன் வரவில்லை என்று கேட்டாளே தவிர, அதிகார உரிமையோடு அல்ல என்று கைலாசத்தின் மனம் திருப்திகரமான ஒரு விடையைக் கண்டுபிடித்தது. புதிய ஆடை அணிகளை அணிவதனால் பெண் மகிழ்ச்சி பெறுகிறாள் என்பது சரி. அதைவிட அதிகமான மகிழ்வு, மற்றவர்கள், முக்கியமாக இளைஞர்கள்அவளுடைய அலங்காரங்களைக் கண்டு வியக்கிறபோது