பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சண்டைக்கோழி * 58 போறியாக்கும்! மூஞ்சியைப் பாரு!” என்று சொல்லி, தன் உதடுகளை இழுத்துச் சுளித்து வலிப்புக் காட்டினாள் செல்லம். "என்ன இருந்தாலும் செல்லத்தம்மா மூஞ்சியின் அழகு வேறு யாருக்குத் தான் இருக்க முடியும்!” என்று கூறிச் சிரித்தான் அவன். "என்ன வம்புச் சண்டை இழுக்கிறே?" என்று சீறினாள் அவள். “யாரு சண்டைக்கு வந்தது என்கிறது உனக்கே "நீ ஏன் எங்க கோழியின் காலை முறிச்சே? நாங்க கோழி வளர்க்கிறது உனக்கு வயித்தெரிச்சலா இருக்குதாக்கும்? அதுக்குக் கோழியா பழி' என்று சிடு சிடுவெனப் பேசினாள் அவள். "இந்தா பாரு, செல்லம். நீதான் வீண் சண்டைக்கு வந்திருக்கிறே! உன் கோழியை நான் இன்றைக்கெல்லாம் பார்க்கவே இல்லை. அதன் காலை முறிக்கவுமில்லை. உங்க வீடு பூராவையும் கோழிப் பண்ணையாக மாற்றிக் கொள்ளு, எனக்குக் கவலை கிடையாது” என்றான் முருகையா. செல்லம் இடுப்பில் அன்பாக ஒடுக்கி வைத்திருந்த கோழியைக் கைகளில் பற்றி எடுத்து உயர்த்திக் காட்டி, "இதை நீ பார்க்கவே இல்லையா? இது மேலே நீ கல் எறியவே இல்லையா? இதுங் காலை நீ ஒடிக்கலியா?" என்று கூச்சலிட்டாள். . . "ஏன் இப்படிக் கத்தறே? நான் கல் எறியவுமில்லை; காலை ஒடிக்கவுமில்லை. உங்கள் வீட்டுக் கோழி கோழியாகவா வருது! உன் மாதிரி பேயாகத்தான் இருக்கு, தொந்தரவு பொறுக்காமல் யாராவது கல்லை வீசி இருப்பாங்க. வேணும்னா கல்லை எறிந்து காலை ஒடிச்சிருக்கப் போறாங்க?" -