பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 & | வல்லிக்கண்ணனின் மணியான Gಿ] "ஒகோ! நான் பேய்க் குட்டியா? எங்க அப்பா பேயா?" என்று கர்ஜித்தாள் செல்லம். "அம்மா தாயே, உன்னைக் கும்பிட வேணுமின்னாலும் கும்பிடுகிறேன்.” அவள் அவனைப் பேசவிடவில்லை. "நீ ஏன் என்னைக் கும்பிடணும்கிறேன். கோழி காலை ஏன் முறிச்சேன்னு கேட்டால், கும்பிடுகிறேன், குழை அடிக்கிறேங்கிறியே? இங்கே யாரும் சாமியும் ஆடலே; பேய் புடிச்சும் அலையலே! தெரிஞ்சுக்கோ" என்று சீறினாள் செல்லம். "ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லி தலையை ஆட்டினான் முருகையா. ஒரு முறைப்பு முறைத்து அவனைக் கவனித்து விட்டுப் போய்ச் சேர்ந்தாள் அவள். "இந்தப் பெண்ணுக்கு ஏதோ கோளாறு மனசுக் குள்ளேயே வேலை செய்து கொண்டிருக்குது. இல்லைன்னு சொன்னால் என்னை ஏன் அனாவசியமாக வெறுக்க வேண்டும்? தேவையில்லாமல் ஏன் சண்டைக்கு வரணும்?" என்று நினைத்துக் கொண்டான் முருகையா. செல்லம் அவன் கவனத்தைக் கவருவதற்குச் சண்டை போடுவதை ஒரு உபாயமாகக் கொண்டிருந்தாளா? அல்லது அவளுடைய சுபாவமே அப்படி வளர்ந்து விட்டதா? இந்தச் சந்தேகம் முருகையாவுக்குத் தீராமல் இருந்தது. அவள் அடிக்கடி முறைப்பதும், மூஞ்சியைச் சுளிப்பதும், முணமுணப்பதும், எரிந்து விழுவதுமாகப் பொழுது போக்கி வந்தாள். அவனுக்குத் தோட்டத்தில் அலுவல் இருக்கிற போதெல்லாம் அவளுக்கும் அவள் வீட்டுப் பின்பக்கத்தில் வேலைகள் மிகுதியாகக் குவிந்துவிடும் போலும் அவன் வீட்டுத் திண்ணையில் இருந்தால், அவளுக்கும் வீட்டு வாசல் வேலைகள் தான் முக்கியமாகத் தோன்றிவிடும். அவன் வீட்டுக்குள்ளே இருந்தால், அடுத்த வீட்டில்