பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் o

கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் என் கடிதங்களை பாதுகாத்து வருகிறார்கள்? - சிலபேர்களுக்கு மிக திறையவே எழுதினேன். புதுடில்லி ஆதவனுக்கும். -:

-உங்கள் கடிதங்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கின்றன. எவ்வளவோ விஷயங்கள் பற்றி ரசமாக எழுதுகிறீர்கள்.எங்கள் வீட்டில் எல்லோருமே உங்கள் கடிதங்களை ரசித்து மகிழ்கிறோம். எனக்கு வருகிற கடிதங்களை உடனுக்குடன் நான் கிழித்துப் போட்டுவிடுவேன். ஆனால் உங்கள் கடிதங்களை அப்படிச் செய்வதில்லை. சேர்த்துவைக்கிறேன்.

இப்படி ஆதவன் ஒரு சமயம் எழுதினார். அவர் இறந்துபோனார். என் கடிதங்களும் போயிருக்கும்.

உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் இருக்கும். நெய்வேலி இராமலிங்கம் கொஞ்சமாவது வைத்திருப்பார். வண்ணதாசன் பற்றி சொல்வதற்கில்லை. தி.க.சியிடமிருந்து ஏதோ கொஞ்சம் கிடைக்கலாம்.

ஆழ்கடலில் துண்டில் போட்டு மீண்பிடிப்பது போல-விரிந்த வானவீதியிலே நட்சத்திரங்களை அறுவடை செய்ய முயல்வது போல, சிரமமான காரியமாகத்தான் இருக்கும். பார்க்க எளிதானது போல் தோன்றலாம்.

வாரி இறைக்கப்பட்டிருக்கின்றன. கடிதங்கள். ஓரளவாவது சேகரிக்கலாம் என முயற்சி பண்ணுவதில் நஷ்டமில்லை.

அன்பு

ఖి. ఉ.

f3-#6-93

அன்பு நண்பர் அவர்களுக்கு,

வணக்கம்.

காலவேகம் சகல விஷயங்களிலும் குழப்பங்களையும் சிக்கல்களையும் விதைத்துச் செல்கிறது. வாழ்க்கையின் சகல கோணங்களிலும் மாற்றங்கள் ஏற்பட சுழல்களும் உள்ஒட்டங்களும் நிகழ்கின்றன. மதிப்புகள் (Values) பற்றிய கண்ணோட்டங்கள் மாறுகின்றன. -

மாறுதல் வளர்ச்சியின் அறிகுறி என்று சொல்லப்படுவது உண்டு.