பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் }{}9

உங்கள் அனுபவங்களை எளிய, இனிய முறையில் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அவை படிப்பதற்கு சுகமாக இருக்கின்றன.

இவற்றில் பல கதைகள் இல்லை என்று நண்பர் பாவண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் என்ன?

வாழ்க்கைச் சித்திரம் நடைச்சித்திரம் என்று சொன்னால் சரியாக இருக்கும். SKIT, SKETCHES என்ற தன்மையிலும் கதைகள் எழுதப்படலாம். எழுதப்படுவதுண்டு. நீங்கள் எழுதியிருப்பவற்றில் அநேகம் Skits தான்.

"சட்டை', 'நாய்க் குட்டிகளும் எங்கள் சிம்மாசனமும், ஒரு கோட்டுப் புள்ளிகள் போன்றவை இந்த ரகத்தில் சேரும்.

ந. பிச்சமூர்த்தி மனநிழல்' என்று எழுதிக்கொண்டிருந்தார். அப்படி எழுதப்பட்டவை கட்டுரைகளுமில்லை; கதைகளும் இல்லை. ஆயினும் கதைத்தன்மையும், கட்டுரையின் சாயலும் அவற்றில் கலந்திருக்கும். அவற்றை SKETCHES, !MPRESSIONS என்று கூறலாம். உங்களுடைய கிராமாத்மா அனுதாபம் மட்டுமல்ல சங்கு, போன்றவை அப்படிப்பட்டவை.

அவளுக்காக ஒருவன்', 'விதை', 'ஒரு முகாரி மோகனமாகிறது, 'கல்யாணத்துக்குப் போகலையா? போன்றவை வாழ்க்கை யதார்த்தங்களையும், மனித இயல்புகளையும் நன்கு பதிவு செய்துள்ள ரசமான கதைகள்,

இத்தொகுப்புக்கு மேலாகவும் நீங்கள் கதைகள் எழுதியிருப்பீர்கள் - இப்பவும் எழுதிக் கொண்டிருப்பீர்கள் - என்று நினைக்கிறேன்.

எழுதுங்கள். உங்கள் இயல்பின்படி, உங்கன் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்க. எல்லோரும் ஒரே மாதிரித்தான் எழுதவேண்டும் என்பதில்லை. சிறுகதைத் துறை இனிய பூங்கா. அதில் பலப்பல வகையான மலர்களும் பூக்க வேண்டியதுதான்.

என் வாழ்த்துக்கள். பாராட்டுகளும் கூட.

அன்பு

இ;. இ.