பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வல்லிக்கண்ணன்

பட்டியலில் பெயர் காணப்படுகிற நூறு மகளிரும் எட்டயபுரத்தில் 5-12-82 ஞாயிறு அன்று பொம்மெனப் புகுந்து மொய்த்து, கண்களுக்கும் காதுகளுக்கும் சிந்தனைக்கும் விருந்து அளித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

பெண்கள் பெயர்களில் முற்றிலும் புதுமையானதாக இருக்கிறது 'பசுவை என்பது எண்:79) பெண்ணை பசுப்போல இருக்கிறாள் என்று பாராட்டாகச் சொல்வதும் உண்டு. அவளது மந்தகுணத்துக்காகவும் அசட்டுத்தனத்துக்காகவும் "She is a cow' என்று மட்டமாகக் குறிப்பிடுவதும் உண்டு. பசுவை என ஒரு பெண் பெயர் பெற்றிருப்பது ரசமான விஷயமாகத் தோன்றுகிறது.

குழல்வாய் மொழி, மட்டுவார்குழலி, மங்கையர்க்கரசி என்ற இனிய பெயர் கொண்டிருப்பவர்கள் போல ஒருத்தி கரும்படுசொல்லி என்ற இனிய அழகு தமிழ்ப்பெயர் பெற்றிருப்பது மனசில் இன்பத் தேன் வந்து பாயச் செய்கிறது!

ராஜன் கிருஷ்ணன், அனுராதாரமணன், செளந்தரா கைலாசம் ஆகிகயோர் எட்டயபுரம் வந்திருந்து விழாவை சிறப்பித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். வாழ்க மகளிர் வாழ்க எட்டயபுரம்! வாழ்க பாரதி நாமம்;

- : 3 து மும்முரமாகக் கொண்டாடி மகிழ்ந்து போன தமிழ் கூறு நல்லுலகம் தொடர்ந்து பாரதி வழியைக் கையாண்டு முன்னேறுவதற்கு பாரதியின் ஆத்மா அருள் புரியட்டும்.

பொதியவெற்பன்

சென்னை-14

アー3-35

அன்பு நண்ப, வணக்கம். உங்கள் கடிதம். விளக்கங்களுக்காக நன்றி.

மணிக்கொடி பொன்விழா மலர் தயாரிப்பது-அதுவும் தனியாக, சகலபொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டு உருவாக்குவதுமிகவும் சிரமமான காரியம் தான். அதை திறமையாகவும்