பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靜器 வல்லிக்கண்ணன்

அங்கு இல்லை. நண்பர் கரிச்சான்குஞ்சுவின் நினைவுகள் இக்காலகட்டம் பற்றி சரியாக இயங்கவில்லை. முடித்தால், அவருடைய விலாசத்தை எனக்கு எழுதுக.

நலம். நலம் தானே?

அன்பு

%), జీ,

வெ. கலியாணசுந்தரம்,

29-71-82

அன்புள்ள கலியாணசுந்தரம்,

உனது 19-1-82 கடிதம் மகிழ்ச்சி தந்தது. ஒரிசாவில் சாந்திப்பூரில் கடல்நீர் ஆறு கிலோமீட்டர் உள்ளே சென்று, மெதுவாகத் திரும்பி வருவது பற்றியும், வேடிக்கையாக ஜனங்கள் கடலினுள் நடந்துபோய் திரும்புவது பற்றியும் எழுதியிருந்தாய். வியப்பு தரும்விஷயம்.

கடல் வற்றி தண்ணீர் உள்ளே உள்ளே டோய் விடுகிறது. தரையில் என்னென்னவோ கிடக்கின்றன. அவற்றை வேடிக்கை பார்க்கவும், எடுத்துக் கொள்ளவும ஜனங்கள் கூடுகிறார்கள். கடலுக்குள் தடந்து போகிறார்கள். நானும் போகிறேன். வேடிக்கையாக இப்படிப் போகிற போதே, கடல் திடீரென்று பொங்கி, பெரியபெரிய அலைகள் கரைநோக்கி வருகின்றன. ஜனங்கள் பயந்து அலறிக் கொண்டு திரும்பி ஓடி வருகிறார்கள். நானும் ஒட முயல்கிறேன். கால்கள் நகரும் சக்தியை இழந்து விடுகின்றன. அலை பெரிசாய், மிகப் பெரிசாய், வந்து சீறி எழுகிறது. பயங்கரம். நான் அலறிக் கொண்டு விழிக்கிறேன்.

இந்தக் கனவை நான் மூன்று நான்கு தடவை-வெவ்வேறு சமயங்களில்-கண்டிருக்கிறேன். இந்தக் காட்சியை சும்மா இருப்பவனின் வெட்டி நினைப்புகள் என்ற கதையில் எழுதியிருக்கிறேன்.

இது கூட இயற்கையில் நிகழும் உண்மை நிகழ்ச்சியாக உள்ளது என்பதை உன் கடிதம் மூலம் தெரிந்து கொண்டேன். சாந்திப்பூர் பீச்சில் கடல் ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ளே போவதும், ஆட்கள் கடலினுள் சாவகாசமாக நடந்து திரும்புவதும் சகஜமாக