பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 வல்லிக்கண்ணன்

இன்று பிற்பகவில் ஊரை சுற்றிப் பார்க்கும் திட்டம் Book Fai, Hand100m Exhibition நடக்கிறதாம். பார்க்கலாம். துணைக்கு இரண்டு இளைஞர்கள் வந்து வழிகாட்டுவார்கள். சனிக்கிழமை மாலை-பாராட்டு விழா. ஞாயிறு அன்று-தமிழ் நாவல் விழா. 5-ம் தேதி திங்கள் இங்கிருந்து புறப்படுவோம். கொரமாண்டல் எக்ஸ்பிரளயில் ரிசர்வ் பண்ணி டிக்கட் வாங்கியாச்சு 6-ம் தேதி மாலை 6மணி அளவுக்கு எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். தி.க.சிக்கும் இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.

புவனேஸ்வரத்தில் டிவி. இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் சாகித்ய அகாடமி பரிசளிப்பு விழாவை டிவி. காமிராமேன் வந்து படம் பிடித்துக்கொண்டு போனார். டில்லி அல்லது கல்கத்தாவாசியாக இருக்கலாம். டில்லிக்கு அது அனுப்பப்பட்டு, இதர இடங்களுக்கும் போகும். சென்னையிலும் ஒரு நாள் நியூஸில் அது காட்டப்பட்டிருக்கும். நியூஸ் பிலிமுக்கும் படம் பிடித்தார்கள்.

'தாரித்திர' என்ற ஒரிஸா பத்திரிகை பேட்டி கண்டது. அது இந்த ஞாயிற்றுக் கிழமை இதழில் பிரசுரம் ஆகும். புவனேஸ்வரில் இங்கிலீஷ் பத்திரிகை கிடையாது.

புவனேஸ்வரில் கோயில்கள் அதிகம். ஒரு காலத்தில் 700 கோயில்கள் இருந்தனவாம். இப்போது 70 இருப்பதாகச் சொல்லப்படுகிறது. லி ங்கேஷ்வர் கோயில், முக்தேஷ்வர் கோயில், ராஜா ராணி கோயில் பெரியவை. முக்தேஷ்வர் கோயிலை மட்டும் நாங்கள் வெளியே இருந்து பார்த்தோம். நலம்.

அன்பு

fெ, கி.

ராஜவல்லிபுரம் 25一ö一79

அன்பு மிக்க அண்ணா, வணக்கம் எனது 21-ம் தேதி இன்லண்ட் கடிதம் கிடைத்திருக்கும். அதில் தெரிவித்திருந்தது போல, 22 வெள்ளியன்று நான் ஒட்டப்பிடாரம் போனேன்.

முதல்முறையாக, பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு ஜனவரியில் ஒட்டப்பிடாரம் போனபோது, வழி எல்லாம் பசுமையாய், நெடுக உள்ள