பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் | $

திண்டுக்கல்லில் பெரிய ரோடுகளின் இருபுறங்களிலும், சிறு தெருக்களிலும், பாழ்மனைகளிலும், தோட்டங்களிலும், பாழான குளத்திலும், ஊருக்கு வெளியே போகிற ரோடை ஒட்டிய திறந்த நிலப்பரப்பிலும் பார்த்தீனியம் புதர் புதராக, காடாக, மண்டி வளர்ந்து கிடக்கிறது.

எழுத்தாளர் டி.செல்வராஜ் (வக்கீல்) இவ்வூரில் இருக்கிறார். ஒவ்வொரு தடவையும், வீட்டுக்கு வாங்க என்று அழைப்பார். இம்முறை செவ்வாய் மாலையில், கமலவேலனும் நானும் அவர் வீட்டுக்குப் போனோம். ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

பிறகு ஒரு அன்பர் வீட்டுக்குப் போனோம்.

அந்தக் காலத்துத் தாடிமுனிகளிடம், அந்தக் காலத்துக் குடும்பஸ்தர்கள், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தது இந்த வீடு செய்த பாக்கியம். நாங்கள் பெற்ற பெரும்பேறு. உங்கள் வருகை எங்களுக்குப் பெருமை என்று அளப்பார்கள்.

இந்த அன்பரும் அவர் வீட்டினரும் அப்படித்தான் என்னை வரவேற்றார்கள். நீங்கள் வந்திருப்பது இந்த வீட்டின் பாக்கியம். எங்களுக்குப் பெருமை. உங்களைப் பார்க்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். பார்க்க முடியுமா என்று எண்ணுவோம். நீங்களே வந்திருப்பது, எங்களுக்கு சந்தோஷமும் பெருமையும் தருகிறது’ என்றார்கள்.

உடனே கடைக்கு ஆள் அனுப்பி, மிக்ஸ்சர், பிஸ்கட் வாங்கி வரச் செய்து உபசரித்தார்கள். பலர் பெருமைப்படுவதும் சந்தோஷப்படுவதும் என்னை பாதிப்பதில்லை ஆனால், சாப்பிடும்படி உபசரிப்பது தான் எனக்கு கஷ்டமாகிவிடுகிறது.

அன்ட்;

ఛీ, డి,

ராஜவல்லிபுரம் 10-2-86

அன்புள்ள ராதா,

நீங்கள் எல்லோரும் வழக்கம் போல் வழக்கமான காரியங்களை செய்து கொண்டிருப்பீர்கள். சந்தோஷம். இந்தப் பக்கம் நெடுகிலும் 'கொடை நடைபெறுகிற எலிசன் இது. அங்கங்கே காணப்படுகிற