பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹密 வல்லிக்கண்ணன்

சுடலைமாடன் பீடங்களுக்கும் (பூடங்கள் என்று சொல்வார்கள்) அம்மன்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு நாள் விசேஷ கவனிப்பும் ஏக தடயுடலும் கிட்டும். சாமி ஆடுகிறவர்கள் ஆ-ஊ என்று அலறி ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்.

இந்த சாமி வந்து இறங்குவதும், அதனால் ஆடுவதும் சுவாரஸ்யமான விஷயம்தான். இசக்கி மகள் வேலு மேலேகூட திடீர்னு சாமி வந்து இறங்கிவிட்டதாம். அவள் அப்பன் சுப்பையாத் தேவர் ஒழக்குத் தேவர் ராஜவல்லிபுரத்தில், ஒரு பூடம் ஏற்படுத்தி பூசை பண்ணி, அவ்வப்போது கொடை கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் செத்த பிறகு வேறு யாரோ கவனித்து வந்தார்கள். அந்த சாமிக்கு, பல வருஷங்களுக்குப் பிறகு, இப்ப அதிகுப்தி ஏற்பட்டு விட்டதாம். அது சீவலப் பேரியை தேடிப்போய், வேலம்மாளை ஆட்டிவைத்து, பூசை போடும்படி கேட்டதாம். ஆகவே, போன செவ்வாய் அன்று (4-2-86) வேலு, அவள் புருசன், மனப்பாடு ஊரில் உள்ள வேறொரு பங்காளி எல்லாரும் ராஜவல்லி புரம் வந்து ராத்திரி பூசை பண்ணிவிட்டு, இரவே போய்விட்டார்கள். 200 ரூபாய் செலவு. ஆளுக்கு நூறு ரூபாய் என்று கணக்கு பண்ணிக் கொண்டார்கள்.

இப்படி சாமி, கொடை, நேர்த்திக் கடன் என்று ஆட்கள் ஊர்விட்டு ஊர்போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். பணம் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. கல்யாணம், விசேஷம் என்று போகிறவர்கள் வேறு. மாநாடு, கருத்தரங்கு, சொற்பொழிவு என்று

போகிறவர்கள். பிசினஸ் என்று அலைகிறவர்கள் - ஆக, எப்பவும் எங்கும் ரயில்களிலும் பஸ்களிலும் கூட்டம் தான். பார்க்கப்போனால், நாட்டிலே பாதிப்பேர் தினசரி ரயில்கள், பஸ்கள், இதர வாகனங்கள்

- ۳۰۲ ۶ متش دانه کر

- ..த்தும் 1 -+ أسس هنة. ைம் செய்து கொண்டேயிருக்கிதார்கள். சம்மா சுற்றுகிற சோம்பேறிகள்,

-- مهم - . *** 4ణిr ہتھی. ژ f-r پہ ہمیرِ ہمہ:م سn

என்னைப் போல் வேலையற்று விருதாவுக்கு சுற்றுகிற வீனர்கள் இப்படியாகத்தானே ஊரிலே, நாட்டிலே, உலகத்திலே சுற்றுகிறவர்கள் எண்ணிக்கை ரொம்ப ரொம்பத் தான். -

பொம்பிளைகள் பெரும்பாலும் கல்யாணம் செய்து, பிள்ளைகள் பெற்று, குடும்பம் என்று நடத்தி, திருப்தியோடும், திருப்தி இல்லாமலும் நாளோட்டுவதிலேயே அக்கறை உடையவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அரசு சொன்னாலும், பொம்பிளைகள் தங்கள் மகள்களுக்கு 15 வயசிலேயே கல்யாணம் நடத்துவதில் அக்கறை கொள்கிறார்கள்.

இவ்வூர் குலசேகரன் - சுந்தரி, மகள் சரசு (அரணாசலவடிவு),