பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#43 வல்லிக்கன்னன்

தட்டித் துடைத்து, ஒழுங்குபடுத்திய போது, ஆறுதல் அளிக்கும் நிலை எனது பழங்கால வெளியீடுகள் பாழாகவில்லை. நல்லபடியாக உள்ளன. அமரவேதனை என்ற கவிதைத் தொகுதி 2: நினைவுச்சரம், அலைமோதும் கடல் ஒரத்தில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதல்பதிப்பு - எழுத்து பிரசுரம்), 2-ம் பதிப்பு அகரம் வெளியீடு; சரஸ்வதி காலம்; பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை: இருட்டு ராஜா கதைக்கதிர் மாத இதழில் வந்தது) 2-இவை போய்விட்டன. பரவால்லே. இவை வேறு பிரதிகள் சென்னையில் இருக்கின்றன. நினைவுச்சரம் எழுத்துப் பிரதி (அழகான படங்கள் ஒட்டிய அழகிய டயரி); மற்றும் பல டயரிகள் (கடிதங்கள் எழுதப்பட்டவையும், ரசமான குறிப்புகள் எழுதப்பட்டனவும்) அழிந்து போயின. இதர எழுத்துப் பிரதிகள் பலவும் (இதய ஒலிஅடிவானம் பகுதிகள்; சம்பங்கி புரத்துப் பொம்பிளைகள்' எழுதப்பட்டவை) தெற்கு அரையில் இரும்பு ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ளன. இவை அப்படியே இருக்கின்றன.

அப்பா எழுதிய புத்தகங்கள் (முழு செட்), அண்ணாதுரை புத்தகங்கள், 27), திக.சி. மொழிபெயர்த்தவை பாழ்படவில்லை.

தெற்கு அறை கட்டையில் தொங்கவிடப் பட்டுள்ள குடை, கீழ அறையில் உயரே பலகை மீது வைத்துள்ள தலையணைகள் - நல்லபடியாக இருக்கின்றன.

ஆகவே, போனவை போக இருப்பவை லாபம்!

இங்கு வந்துபோன இடைசெவல் நண்பர் ராஜநாராயணன் எழுதுகிறார் -

'ஒரு சன்யாசியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எனக்குப் பொறாமை தான். எந்த வித அல்லலும் சிக்கலும் இல்லை. இதில் மனநிறைவு மட்டும் ஏற்பட்டு விட்டால் போதும். தேவன் தான் நீங்கள். என்னைப் பார்க்கிற போதெல்லாம், நீங்கள் ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ வாங்கி வைத்துக்கொள்வது நல்லது என்று அவர் சொல்வார். இந்த முறையும் வலியுறுத்தினார். இந்த ஊருக்கு வந்த நணபர்கள் அவ்வப்போது இதையே சொன்னார்கள். ரேடியோ வாங்கி விடுங்கள் என்று. வாங்கிவிடலாம் என்று இதுவரை எனக்கு தோன்றவில்லை.

அன்பு

3)l. &;.