பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் §§2

நான் 21-ம் தேதி அனுப்பிய கடிதம் 23-ம் தேதி உனது கடிதத்தை போஸ்ட் செய்த பிறகு கிடைத்திருக்க வேண்டும் இல்லாவிட்டால், 25ல் கிடைத்திருக்கலாம்.

அமராவதி அணை, திருமூர்த்திமலை எல்லாம் போய் பார்த்தது பற்றி எழுதியிருந்தேன். 'சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் பார்த்ததையும் எழுதினேன். விசு கதை-வசனம் நன்றாக இருக்கிறது. உள்ளத்தைத் தொடுவது 'உருக்கமான கட்டம்' என்றெல்லாம் சொல்வார்களே, அப்படிப்பட்ட இடங்கள் நிறைய இருக்கின்றன. லட்சுமி நடிப்பு ஜீவனோடு விளங்குகிறது. மக்களுக்குப் பிடித்து விட்டது. இந்தப் படம் எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக ஒடும்.

'மெடிக்கல் எபீட் கிடைக்கவில்லை என்பதுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை. தொலைஞ்சு போகிறது:

எல்லாம் நன்மைக்கே என்று எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏமாற்றங்களும் அனுபவங்களே.

நீ தைரியமாக இருக்க வேண்டும். மனசை அதற்குப் பழக்கிக் கொள்ள வேண்டும். நன்றாக, நிறைய, படிப்பது மட்டும் போதாது. தேவையான சமயத்தில், படித்தது மறந்து போகாமலும் இருக்க வேண்டும். தேர்வு நேரத்தில் பரபரப்பும் பதட்டமும் கொள்ளக் கூடாது. நிதானமாக இருக்கப் பழக வேண்டும். தோல்வி, ஏமாற்றம் எதிர்ப்படுகிற போது அழுகை வருவது இயல்பு தான். எதிர்ப்பார்ப்பது கூடி வராத போது ஏமாற்றமும் வருத்தமும் மனசை சங்கடப்படுத்தவே செய்யும்.

ஆனால், இதை எல்லாம் தாங்கிக் கொள்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். .

படிக்கிற காலத்தில் நானும், எதுக்கெடுத்தாலும் அழுகிறவனாகத்தான் இருந்தேன். என்ன நேர்த்தாலும் அழுவது. நேராத போதும் அழுவது. அதனால் 'அழுகுணித் தம்பான் என்று ஒருவர் எனக்குப் பெயர் வைத்திருந்தார். பிறகு பிறகு, நானாகவே மனசை சரிப்படுத்திக் கொண்டேன்.

வருவது வரட்டும், போவது போகட்டும்; எல்லாம் நன்மைக்கே என்று மனம் தைரியம் கொண்டு விட்டது.

அன்பு

©3Ꮬ.