பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 வல்லிக்கண்ணன்

கே.பி. கணபதி

சென்னை

25–3–93

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு, வணக்கம்.

உங்கள் 20-ம் தேதிக் கடிதம் ரசமான தகவல்களைக் கொண்டுள்ளது. மறதி மனித இயல்பு. முதுமையில் அது அதிகரிப்பது இயற்கை நியதி. சிலர் நல்ல நினைவாற்றல் பெற்றிருக்கிறார்கள். அது நற்பேறு என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல, முக்கிய விஷயங்கள் மறந்துபோவதும், தேவையில்லாத சின்ன விஷயங்கள் மனசில் ஆழமாகப் பதிந்து கிடந்து, அடிக்கடி நினைவு வட்டத்தில் குமிழிகளாக மேலே எழுவதும் சகஜமாகத் தான் இருக்கிறது.

நினைவுகள் இனியவை. நிலாச்சோறு சாப்பிடுவது பற்றி நான் ஒரு கட்டுரையில் 'நினைவு தந்த நினைப்பு') எழுதினேன். (ஜனவரி 'அமுத சுரபி' ஒரு நண்பர் ரசித்து நினைவுகூர்கிறார்: மரவையில் இப்போது இல்லாது போன பொருள்) பழையச் சோறு வைத்துப் பிசைந்து, கண்டக்கறி தொட்டுச் சாப்பிட்டது, ஆச்சி உருட்டித் தந்தது, இப்ப நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது என்று. நினைவுகளும் நினைப்புகளும் வாழ்க்கையை இனிமையாக்குபவை.

அன்பு

©Ꮞ, &.

சென்னை

72-7-93

அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம். இந்த நூற்றாண்டின் முப்பதுகள் நாற்பதுகளில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே. ஆர். ரங்கராஜு, வை. மு. கோதைநாயகி அம்மாள், செய்யூர் சாரநாயகி ஆகியோர் நாவல் உலகில் பெயர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். புத்தகம் படிப்பதில் ஆர்வம் உடையவர்கள் எல்லோரும் அந்நாட்களில் இவர்களது நாவல்களையும், மற்றும் எஸ்.எஸ். அருணகிரிநாதர், தனசிங் என்றொருவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக்கொலையையும் படித்தே இருப்பார்கள். .