பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 17

எழுதத் துடித்த பலரும் கூட. க. நா. சு. இது பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 60களுக்குப் பிறகு வடுவூரார் எல்லாம் அவுட் ஆஃப் ஃபாஷன் ஆகிப் போனார்கள்.

அவர்கள் ஆங்கில நாவல்களைத் தழுவித்தான் எழுதினார்கள். இருப்பினும் விறுவிறுப்பும், கதைச் சுவையும், அப்புறம் என என்று தூண்டுகிற ஒரு தன்மையும், ஒரு நாவலை எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாத ஒரு தவிப்பை வாசகரிடம் ஏற்படுத்தின. முக்கியமாக வடுவூரார் நாவல்கள். அப்படி எழுதவும் ஒரு தனித்தன்மை வேண்டும் தான்.

அன்பு

8ìi. #5.

சென்னை

13-7-93

அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம். வடுவூர் வகையரா பற்றி நேற்று கொஞ்சம் எழுதினேன். இன்று மேலும் கொஞ்சம். நீங்கள் நினைவு கூர்வது போல, சட்டநாத பிள்ளைக்கும் பட்டை நாமம் சாத்தினார் என்ற ரீதியில், கவர்ச்சிகரமான - மனசில் எளிதில் பதிந்துவிடுகிற சொற்கோவைகள், வரிகள் வடுவூரார் கையாண்ட உத்திகளில் ஒன்று என்று சொல்லலாம்.

'கல்லுக் கிணற்றுக்கு ஏற்ற இரும்புத் தோண்டி கடப்பாரையை ஜீரணிக்க சுக்குக் கஷாயமா? சாக்கடைப் புழுவுக்கு போக்கிடம் ஏது? இவை போன்ற பழமொழிகளை வடுவூரார் நாவல்களில் அத்தியாயம் மற்றும் பக்கங்களின் தலைப்புகளாக காணமுடியும்.

வாழ்க்கை நிலைமைகளை அவர் கிண்டல் பண்ணினார். காலம் ஒடியது. அடுத்த வீட்டு அலமேலு எண்ணிக்கோ என்று பத்து மாதத்துக்கு ஒரு குழந்தை பெறுவதும் என்று ஆரம்பித்து தெரு, ஊர், தேச விவகாரங்களை அடுக்கி, இப்படி அடுக்கடுக்கான சம்வங்களோடு மாதங்கள் பல ஒடின என்று எழுதுவார். வெறும் உயர்வு நவிற்சியும் பக்கங்களை வளர்ப்பதற்கான உத்தியும் தான். ஆனால் வாசகருக்கு கிளுகிளுப்பு ஊட்டும் சுவையான அளப்புகள் அவை.