பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

அன்பு

Głł. 35.

சென்னை

j4-7–93

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு, வணக்கம்,

வழுவூரார் பற்றிய மூன்றாவது கடிதம் இது. வடுவூர் துரைசாமி ஐயங்கார் பல துறைகளிலும் நிலவிய குறைபாடுகளை மறைமுகமாக நையாண்டி செய்தார் என்று சொல்லவேண்டும். சர்க்கார் ஆபீஸ்களில் - முக்கியமாக சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீசில் முக்கிய தாள்களில் அடிக்கப்படுகிற முத்திரைகள் தெளிவாகவே இருந்ததில்லை. கறுப்பு மை பூசி, மொத்தையாய், ஏதோ ஒரு வட்டம் தென்படும். வடுவூராரின் திவான்பகதூர் லொடபடசிங் சர்க்காருக்குப் போட்டியாக ஆபீஸ் அமைத்து, திருட்டுத்தனமாகக் காரியங்கள், செய்து லாபம் பெறுகிறான். ஆபீஸ் ஜபர்தஸ்து எல்லாம் உண்டு. ஆபீசில் பத்திரங்களில் முத்திரை இடப்பட்டது. எப்படி? ஒரு கத்திரிக்காயை பாதியாக வெட்டி, அந்தப் பகுதியில் வண்டிமையைப் பூசி, தாள்களில் பதிக்கப்பட்டு வந்தது. அந்த முத்திரையை கடைசிவரை எவரும் சந்தேகித்ததில்லை.

வடுவூராரின் மூளை விசேஷமானது தான்.

அன்பு

சென்னை

37ーアー93

அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு, வணக்கம்.

உங்கள் 26, 28 தேதிக் கடிதங்கள் மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். கொள்ளை அடிப்பது, சுரண்டிக் கொழுப்பது போன்ற வேலைகளில் திருநெல்வேலி மாவட்டம் போட்டி போட்டுக்கொண்டு முனைப்பாக இருப்பது அவ்வப்போது தெரிய வருகிறது. தமிழ்நாடே இத்திருப்பணிகளை திருப்திகரமாகச் செய்து புகழ்க்கொடி பறக்கவிடுகிறது. இந்தியா ரொம்ப ரொம்ப. ஆகவே இது யுகதர்மம் என்றாகியுள்ளது.