பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 53

சென்னை.

5-2-94

அன்பு மிக்க முஸ்தபா,

வணக்கம். உங்கள் 1-ம் தேதிக் கடிதம் நேற்று வந்தது. விழுது' 2 இதழ்கள் கிடைத்துவிட்டதை அறிய மகிழ்ச்சி. ஜனவரி-31ல் ஒரு கார்டு அனுப்பினேன். வந்திருக்கும். எனக்கு வருகிற பத்திரிகைகளை நான் படித்து, அனுப்பியவர்களுக்குக் கடிதம் எழுதிய பிறகு, தரமான இதழ்களை இலக்கிய ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு அனுப்பிவிடுவது என் வழக்கம். அவற்றை சேர்த்துவைப்பதில்லை. அப்படி சேர்த்து வைக்க இடவசதியும் இல்லை. இன்று புக்போஸ்டில், விழி. இதய வேந்தன் சிறுகதைத் தொகுப்பு 'நந்தனார் தெரு' அனுப்பியிருக்கிறேன். நான் நலம். எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். செம்மலர், கவிதாசரண், சிற்றிதழ் செய்தி ஆகியவற்றில் கட்டுரைகள் வருகின்றன. புதியபாதையில் எம்.வி. வெங்கட்ராமன் பற்றி ஒர கட்டுரை எழுதியுள்ளேன். சமீப நாட்களில் கதைகள் எழுதவில்லை. எழுதவேண்டும். சென்னையில் வெயில் கடுமை பெற்று வருகிறது. விரைவில் கோடைகாலம் வந்துவிடும். எழுத்தாளர் என். ஆர். தாசன் இறந்து போனார். நல்ல நண்பர். திறமையான படைப்பாளி.

அன்பு

తH. &,

இரெத்தினசுவாமி

சென்னை-14. 7 نيس 7ـ يع

அன்பு மிக்க நண்பர்,

வணக்கம். உங்கள் 3-7-87 கடிதம் கிடைத்தது. ஜூன் மாதம் எழுதிய கடிதமும் வந்தது.

விருதுநகரின் தண்ணீர் வறட்சி, கலாசார-இலக்கிய வறட்சி, நூலக வறட்சி பற்றி எல்லாம் எழுதியிருந்தீர்கள். விருதுநகர் பணம் பண்ணுகிறவர்களை-வணிக மனம் படைத்தவர்களையே - உருவாக்கி வந்திருக்கிறது. அரசியலில் பெரும் தலைவர் காமராஜ் அவர் வழியில் பிறகு எவரும் வரவில்லை.