பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 63

சென்னை,

27-7#-39

அன்பு மிக்க நண்பர், வணக்கம்.

உங்கள் 18-1-89 கடிதம் கிடைத்தது. அதுக்கு முன்பு எழுதிய கார்டும் வந்து சேர்ந்தது. தகவல்கள் அறிய மகிழ்ச்சி.

நான் நலம். என் அண்ணாவும் குடும்பத்தினரும் சுகம். மழை சில நாட்கள் பெய்த போதிலும், போதுமான அளவு

பெய்யவில்லை. ஐப்பசி மாதம் - அடைமழைக்காலம் என்பது பொய்த்துப் போச்சு.

சென்னை நகருக்குக் குடிதண்ணிர் சப்ளை பண்ணுகிற ஏரிகளில் தண்ணிர் குறைந்த அளவு தான் சேர்ந்துள்ளது. ஒரு நாள் விட்டு ஒருநாள், குறிப்பிட்ட சில மணி நேரம், தண்ணிர் சப்ளை பண்ணுவதற்கு பிப்ரவரி இறுதி வரை தாக்குப் பிடிக்கும். தண்ணிர் பெருகியுள்ளது. ஆகவே, கோடையில் தண்ணீர் கஷ்டம் அதிகமாகத் தான் இருக்கும்.

நவம்பர் 12-ம் தேதி எனது பிறந்தநாள். 69 வயது முடிந்து 70 பிறந்துள்ளது. நண்பர்கள் தி.க. சிவசங்கரன், சு. சமுத்திரம், செந்தில்நாதன், என். ஆர். தாசன், மற்றும் சிலர் கூடி வாழ்த்து தெரிவித்தார்கள்.

எனது வாழ்க்கை அனுபவங்களை, நினைவுகளை எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். பல நண்பர்கள், வாசகர்கள் கூட அவ்வப்போது இப்படிக் கோருகிறார்கள். நினைவுகளை புத்தகமாக எழுதலாம் என்றிருக்கிறேன். இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை.

சமீபத்தில் எதுவும் எழுதவில்லை. கடிதங்கள் எழுதுவதிலேயே பெரும் பகுதி நேரம் போய்விடுகிறது. அப்புறம், படிப்பதில்.

படிப்பதற்குப் புதிய புத்தகங்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. கோயம்புத்துர் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இல.செ. கந்தசாமி, உதயமூர்த்தி பாணியில், தன் முன்னேற்ற நூல்கள் (Self-improvement Books) Li sv 6T@g£u?@5 #®pirń. →g¢ubeo p படித்தேன். -

பல சிறுகதைத் தொகுப்புகள்.

பாலகுமாரன் முன்கதைச் சுருக்கம் என்று தன் வரலாற்றை