பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள 9?

சென்னை.

§-4-92

அன்பு மிக்க இராமலிங்கம்,

வணக்கம். நலமாக இருக்கிறேன். அண்ணியும் பிள்ளைகளும் சுகம்.

நீங்களும் மற்றும் அனைவரும் நலம்தானே?

புதிய நம்பிக்கை, நவீன கவிதை இதழ்கள் கிடைத்தன. மிக்க நன்றி.

உங்களுடைய, "வேர்கள் நண்பர்களுடைய இலக்கியப் பாதுகாப்பு + புரவல் பணி விஸ்தாரம் அடைந்துள்ளது சந்தோஷம் தருகிறது.

புதிய நம்பிக்கை ஊட்டச்சத்து பெறும் உற்சாகத்தில் புதிய வேகமும் புதிய தெம்பும் பெற்று இயங்கும் என நம்பலாம். இந்த இதழும் நல்ல கட்டுரைகள், கதைகள், கவிதைகளை கொண்டிருக்கிறது. படித்து ரசித்தேன்.

நவீன கவிதை'யும் தரமாக இருக்கிறது. உங்கள் ஆர்வமும் ஒத்துழைப்பும் நற்பலன்களை உண்டாக்கக் காலம் துணைபுரியட்டும்.

இந்த வருடம் இலக்கியச் சிந்தனையின் நாவலுக்கான பரிசை தோப்பில் முகம்மது மீரானின் துறைமுகம் பெற்றிருக்கிறது. திறமை நிறைந்த எழுத்தாளரின் தகுதியான படைப்புக்கு பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான்.

ஆண்டின் சிறந்த சிறுகதையை தேர்வு செய்தவர் தி.க.சி. ஆயினும் அவர் விழாவுக்கு வர இயலவில்லை. உடல்நிலை காரணம்.

கவிஞர் மீரா கவி' - 5வது இதழை கொண்டு வந்துவிட்டார். பாராட்டப்பட வேண்டிய விதத்தில் இருக்கிறது.

"சுபமங்களா நல்லமுறையில் வளர்ந்து வருகிறது. புதிதாக 'வாசுகி என்ற வாரப் பத்திரிகை, தினகரன் நிறுவனத்திலிருந்து வர இருக்கிறது. பாவை சந்திரன் அதன் ஆசிரியராகச் சேர்ந்து, ஆரம்ப வேலைகளில் முனைந்தார். சீக்கிரமே வெளியேற்றப்பட்டார். தாமரை மணாளன் புகுந்துகொண்டார்! பத்திரிகை எப்படி இருக்குமோ - வந்தால்தான் தெரியும்.

அ.தி.மு.க. சார்பில் தமிழரசி என்ற வாரஏடு வரப்போகிறதாம். பாவை சந்திரன் இதில் சேர்ந்திருக்கிறாராம்.

பெ முருகன் என்ற ஆராய்ச்சி மாணவர் ஏறு வெயில் எனும்