பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் - 33

கண்டுபிடிப்புகளை வழங்குவதும் அற்புதம்தான்.

பிறப்பு ஒரு அற்புதம், இறப்பு? அதுகூட அற்புதமானது தான். யாருக்கு, எப்ப, எப்படி அது நிகழும் என்று தெரியமுடியாமல் இருப்பதால், மரணத்துக்குப் பிறகு என்ன என்று புரிந்துகொள்ள இயலாமல் இருப்பதாலும்.

அன்பு

Gf. 5.

முனைவர் ச. முத்துக்குமரன்

24, 7-7-93

அன்புடையீர்,

வணக்கம். நீங்கள் எனக்கு ராஜவல்லிபுரம் முகவரிக்கு அனுப்பிவைத்த தமிழில் எழுதுவோம்' எனும் சிற்றேடும் கடிதமும் 5ம் தேதி திங்கள் அன்று இங்கு வந்து சேர்ந்தன. மகிழ்ச்சி. பயனுள்ள சிற்றேட்டை அனுப்பி உதவியதற்காக நன்றி.

படித்தேன். ஆங்கிலச் சொற்களுக்கு பொருத்தமான-யாரும் எளிதில் கையாளக்கூடிய தமிழ் சொற்களை தந்திருக்கிறீர்கள், உங்கள் நோக்கமும் முயற்சியும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவை.

தமிழில் ஒலிபெயர்க்கும் முறைகள் பற்றிய இலக்கண விதிகளும் பலருக்கு பயன்படக்கூடும்.

நாளேடுகளில் அவசரம் அவசரமாக செய்திகளை எழுதிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், அங்கு பணி புரிகிறவர்கள் பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேடி சிரமப்படமாட்டார்கள். தோன்றுவதை அப்படி அப்படியே எழுதிவிடுவார்கள்.

சில தமிழாக்க சொற்கள் பழகு தமிழாக அமைவதுமில்லை. எனவே மக்கள் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்துவதை எளிதென உணர்கிறார்கள்.

ஐஸ்கிரீம் என்று சாதாரணமாக வழங்கிவருவதை நீங்கள்

எழுதுவது போல் குளிர்பாற்குழம்பு என்றோ, புதுச்சேரி அன்பர்கள் தமிழாக்கி தத்திருப்பது போல் பனிக்கூழ் எனவோ சொல்வது