பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穿峰 வல்லிக்கண்ணன்

எளிதாக இருப்பதில்லை உரிய பொருளை உணர்த்துவதாகவும் இல்லை.

ரயில் என்பது வெகுகாலமாக புகைவண்டி' என்று தமிழில் குறிக்கப்படுகிறது. நீரா வித் தொடர்வண்டி எனவும் எழுதப்பட்டுள்ளது; ஆனால் புகைவிடாத டீசல் என்ஜின் மாட்டிய தொடர்வண்டிக்கு மின்சாரத்தால் இயங்கும் என்ஜின் உடையதற்கும்) 'புகை வண்டி என்ற சொல் பொருந்திவராது.

ஹீரோ - கதாநாயகன் என்பது சரியே. ஆயினும், அது ஒரு QuiróGsm gogo. Hero of our Times, Hero-Worship groopsi\sumih வருகிற போது, ஹீரோ கதாநாயகன்"இல்லை. நம்கால நாயகன், வீர நாயகன், வீர வனக்கம் என்றே தமிழாக்கப்படும். இப்பொருளையும் நீங்கள் குறித்திருக்கலாம்.

ஸ்கூட்டர் என்பதற்கு பாயும் உந்து அல்லது பாயும் வண்டி’ என்பதை விட, உள்ளதை எளிதில் உணர்த்தக்கூடிய வேறு சொல் தேவை என்று கருதுகிறேன்.

உங்களைப் போன்ற அறிஞர்கள் பலரது ஆர்வம் நிறைந்த முயற்சி தமிழுக்கு வளம் சேர்க்கும் என்பது உறுதி. வாழ்த்துக்கள்.

அன்பு

ఢ, ఢీ,

மா. க. வேலன்

14-10-93

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு, வணக்கம். -

நான் முக்கியமானதான எதுவும் எழுதவில்லை. அன்புத் தொல்லைகள் தொடர்ந்து செயல்புரிகின்றன. பல புத்தகங்களுக்கு முன்னுரை, அணந்துரை எழுதிக்கொடுக்கிற வேலையே பெரியதாக இருக்கிறது. ஒரு புத்தகத்தை படித்து முன்னுரை எழுதி முடித்தால், அடுத்து இன்னொன்று வந்துவிடுகிறது. இப்படி தொடர்வேலையான இது இருந்துகொண்டே வருகிறது.

நான் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு அணிந்துரை