பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 109

தென்பெண்ணை, பாலாறு, வைகை மட்டுமே நீரற்ற வறண்ட படுகைகளாக இல்லை. இப்போது நாட்டில் வளம் சேர்த்து குளுமையாய்ப் பெருகி ஓடிய காவிரியும் அதன் கிளை நதிகளும் நீரற்றுக் காய்ந்து காணப்படுகிற காலமாக இருக்கிறது இது.

எங்கும் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவை விரும்பத்தக்க மாறுதல்களாக இல்லை. மனித வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் மாற்றங்களாக இல்லை, பெரும் பாலான மாற்றங்கள்.

இயற்கை செய்யும் மாறுதல்கள் பல. மக்கள் செய்கிற மோசமான மாறுதல்கள் அநேகம்.

இயற்கையின் வக்கிரச்செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க இயலாது. ஆனால், மனிதர்கள் சுயநலப் போக்கினாலும் பண ஆசையினாலும் இதர பல மோகங்களினாலும் நிகழ்த்திக் கொண் டிருக்கிற விரும்பத்தகாத, அநேக சமயங்களில் தேவை இல்லாத, அடாவடித்தனமான விளம்பர ஆசையாலும் நாகரிக மோகத் தினாலும் வளர்ந்து வருகிற மாற்றங்களைத் தவிர்க்க இயலும்.

அதற்கு மக்களின் மனநிலை மாறவேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. என்பார்கள். அதுதான் முக்கியம்.

இ.