பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைச் சுழலில் கதாபாத்திரம்

காவிய கர்த்தர்களும், கதாசிரியர்களும் விதம்விதமான கதாபாத்திரங்களை உருவாக்கு கிறார்கள். அவர்களை வகைவகையான அனுபவங்களிலும், சிக்கல்களிலும், உணர்ச்சிக் குழப்பங்களிலும் உழலவிடுகிறார்கள்.

அத்தகைய மாந்தரும் அவர்களது அனுபவங்களும் வாசக ரசிகர்களிடையே வெவ்வேறு ரகமான தாக்கங்களை ஏற்படுத்து கின்றன. சில கதாபாத்திரங்களின் உணர்வு களும் செயல்களும் மூலக்கதையில் இருப்பதை விட மாறுபட்ட விதத்தில் அமைந்தி ருந்தால் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்குமே என்ற நினைப்பு கற்பனைவளம் பெற்ற சிலருக்கு உண்டாகிறது. உடனே அவர்கள் தங்கள் மனதுக்கேற்றபடி ஒரு புதுக்கதையை உண்டாக்கி விடுகிறார்கள்.

காலங்காலமாக கதை கவிதை எழுதுகிற படைப்பாளிகள் கையில் படாத பாடுபடும் கதாபாத்திரங்களில், கவிஞர் கதாசிரியர் நாட காசிரியர் அநேகர் அவரவர் கற்பனைக்கும் மனோதர்மத் துக்கும் கண்ணோட்டத்துக்கும் தகுந்தபடி அகலிகை கதைக்குப் புதுமெருகு தீட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். வெவ்வேறு இந்திய மொழிகளிலும்.