பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 வல்லிக்கண்ணன்

கூறுவானேன்? அவளை நீ தண்டித்தது எப்படி நியாயமாகும்?" என்று ஒருவர் எழுத்தில் சாடியுள்ளார்.

அகலிகை - முனிவன் - இந்திரன் விவகாரத்தை, கோவை ஞானி மார்க்சியப் பார்வையில் நோக்கி 'கல்லிகை என்றொரு குறுங்காவியம் படைத்திருக்கிறார் முற்றிலும் வித்தியாசமான பார்வை அது.

உழைக்காமலே உல்லாசமாகவும் சோம்பேறித்தனமாகவும் பொழுதுபோக்கி வாழ்கிறவர்களின் பிரதிநிதிதான் கெளதமன். உழைப்பவர்களது - உழைப்புமூலம் சூழ்நிலையில் புதுமைகள் புகுத்துவோரின் உருவகம் இந்திரன், படைப்புக்காலம் தொட்டு இன்றுவரை அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டு உரியமுறையில் கவுரவிக்கப்படாமலும் திருப்தி செய்யப்படாமலும் குமைந்து கொதிக்கிற பெண் இனத்தின் எடுத்துக்காட்டு அகலிகை,

அவள் கணவன் உடல் கூட்டை உயிர்க்கயிற்றில் கட்டி இழுத்துத் திரியும் எந்திரம் அவனோடு அவள் நடத்திய தாம்பத்திய வாழ்க்கை அவள் போன்ற பத்தினிகள் அனைவரும் அனுபவிக்கும் அவலவாழ்வு. இந்நிலையில் ஆசைப் புயல் அடித்தடித்து நிமிர்ந்து கிடந்த தசைத்தியை எந்த நாய்க்கு முன்னரும் எடுத்தெறியத் தயாரானாள் அகலிகை.

காட்டுச் சிந்தனைப் புதர்களை வெட்டி வாழ்வின் நேர் பாதையை வகுப்பதற்கே வச்சிரம் எடுத்ததாகச் சொன்ன இந்திரன் அகலிகை மனசைக் கவர்ந்து அவள் உடலுக்கும் மிகுந்த சுகானு பவம் தருகிறான்.

இந்திரனை வெற்றிகொள்ள முனிவர் இறைவன் ஒருவனைக் கற்பனையாய் உருவாக்கினார். அகலிகை மூலம் இதைக் கேட் டறிந்த இந்திரன், ஞானத்தாடியை அசிங்கமாய் வளர்த்த முனிவனைக் கண்டவன், அவளை விட்டு ஓடினான். ஆத்திரப் புயல் கிளப்பிய சொற்புழுதியைச் சாபம் என்று வீசினான் முனிவன். அவனை அவள் வெறுத்தாள். அவளிடம் இன்பம் அனுபவித்தும் அவளது இதயத்தை உணரத் தவறிவிட்ட சுரண்டல் மன்னன் இந்திரனையும் கரித்துக் கொட்டினாள். இது பன்னெடுங் காலமாக நடந்து வருகிறது.

உலகம் எனதே என உரத்து முழங்கும் ஒருவன், நீயே இறைவன் என்னும் இன்னொருவன். இருவரின் காலடியில் ஒர் அநாதை மனிதன். நெறிபடும் அவன் கண்களில் அகலிகை முகம் தெரிகிறது. உள்ளத்தை உயர்த்த விரும்பியவர் உடலை மதிக்க வில்லை. உடலை மதிக்க வந்தவர் உள்ளத்தைக் கவுரவிக்கவில்லை. இந்த உண்மைகளை வலியுறுத்துகிறது ஞானியின் கல்லிகை.