பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4t 6 வல்லிக்கண்ணன் நீதான் என் துன்பத்துக்குக் காரணம். என்னுள்ளத்தில் உனக்கு இடமில்லை" என்று அகலிகை உறுதியாகத் தெரிவித்தாள்.

தொலைவில் விசுவாமித்தரர் இராம லட்சுமணரோடு வருவது தெரிந்ததும் இந்திரன் மறைந்துவிட்டான்.

கெளதமர் திரும்பியதும் ஆசிரமத்தில் இருந்த அகலி கையைப் பார்த்துத் திகைத்தார். மகிழ்ந்தார். அவளது அழகு, முன்னைவிடக் கூடியிருப்பதாகத் தோன்றியது. அவருடைய மனக்குழப்பத்தைக் கதை வெளிப்படுத்துகிறது. தம் உணர்ச்சி களை வெளியிட, கவர்ச்சிமொழியில் தம் காதலைத் தெரிவிக்க அவருக்குத் தெரியவில்லை. அவர் வேறுவிதமாக அவளிடம் தம் அன்பைக் காட்ட முனைந்தார். "அகலிகே உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள், நீ என்ன கேட்டாலும் தருகிறேன்" என்கிறார்.

அகலிகை அவரை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு சொன்னாள் "இந்திரனாக என்னிடம் வாருங்கள்",

கதை முடிந்தது.

அகலிகையின் கதை இன்னும் பல விதங்களில் பலரால் கற்பனை நயத்தோடு சித்தரிக்கப்பட்டிருக்கலாம். நான் அறிந்தது இவ்வளவுதான்.

ஆழ்