பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய லட்சியவாதிகள்

தெற்குக் கடற்கரை ரஸ்தாவின் கீழ்ப்புற நடைபாதையின் கிழக்குப் பக்க வரம்பு ஆக அமைந்துள்ள உயர்ந்த பட்டியக்கல் மீது அமர்ந்து எதிரே இயங்கும் உலகத்தை வேடிக்கை யாகப் பார்த்துக்கொண்டிருப்பது என் பொழுதுபோக்குகளில் ஒன்று.

அன்றும் அப்படித்தான் இருந்தேன். வழியே போய்க் கொண்டிருந்த ஒருவன் என் முன் நின்றான். கல்லா ஆஸ்பத்திரி இங்கே எங்கே இருக்குது என்று கேட்டான்.

அப்படி எந்த ஆஸ்பத்திரியும் இந்தப் பக்கம் இல்லை என்றேன்.

இந்தப் பக்கம்தானே இருக்குன்னு சொன் னாங்க. அதுக்கு எதிரே பத்மினி வீடு இருக்கு தாமே ? என்றான் அவன்.

கல்யாணி ஆஸ்பத்திரியைத் தான் அவன் அப்படி விசாரித்திருக்கிறான் என்ற விஷயம் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

அது எலியட்ஸ் ரோடில் இருக்கு. இங்கிருந்து இன்னும் அரை மைல் தூரம் நடக்கவேண்டும் என்றேன்.

அவன் என் பக்கத்தில் உட்கார்ந்து தன் கால்களைத் தடவ ஆரம்பித்துவிட்டான்.