பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 435 ஒரிஸா, ராஜஸ்தான் லாட்டரிச் சீட்டுகளும் வாங்குகிறேன். ஜேக்பாட் டிக்கட்கூட வாங்குகிறேன். எப்படியும் நான் பணக் காரனாகிவிடுவேன். வாழ்க்கையை அனுபவிக்கத் தான் போகிறேன் என்றார் நண்பர்.

அப்பாவித் தோற்றமுள்ள நண்பர் சிவராமனின் நம்பிக்கை படிந்த இதயஒலியாக மட்டும் அது தொனிக்கவில்லை. இன்றைய நாட்டுமக்கள் முக்கால்வாசிப்பேரின் லட்சியக் கனவுக் குரல் போலவும் ஒலித்தது அது.

நேரமாகுது ஸார். பிறகு சீட்டுகள் தீர்ந்துபோனாலும் போயிடும் என்று கூறிவிட்டு வேகமாக ஓடினார் நண்பர்.

எப்படியும் பணக்காரராக வேண்டும். உழைக்காமல், கஷ்டப்படாமல் வெகு சுலபத்தில், கூடிய விரைவில் பெரும் பணக்காரனாகிவிட வேண்டும். இதுதான் இன்றைய மக்களின் லட்சிய வேகம். அந்த வேகத்தின் கண்கூடான உதாரணம் இந்த நண்பரும் பிறரும்.

இப்படிச் சொல்லியது என் மனம்.