பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 3

எழுதப்படும் கவிதை கவிதையாகாது. ஒழுக்கமும் தர்மமும் மோட்சமும் கவிஞனது உள்ளத்தில் ஊறி இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசைதான் கவிதையாகும். ஒழுக்கம் அற்றிருப்பது தான் கவிதையின் இலட்சணம் என்பதல்ல நமது கட்சி. கவிதையும் அமைப்பும் உணர்ச்சியும்தான் கவிதையின் உரைகல் என்பது புதுமைப்பித்தனின் கருத்து.

இலக்கியம் சம்பந்தமாக இருவித நோக்குகள் நிலவுகின்றன. இலக்கியம், படித்து ரசித்து மகிழ்வதற்கு உரிய இனிய கனவு. மகத்தான கற்பனைப்படைப்பு என்பது ஒரு நோக்கு அது சரியல்ல. உள்ளத்தின் உயர்வுக்காகவும், மனிதகுல முன்னேற்றத் திற்காகவும் சமூகமேம்பாட்டுக்காகவும் பயன்படுவதுதான் நல்ல இலக்கியம் என்பது மற்றொரு நோக்கு.

இவ்விஷயத்தில் புதுமைப்பித்தனின் கருத்து என்ன? இரண்டும் பாதி உண்மைகள் என்கிறார் அவர்.

இலக்கியம் மனிதனது மோகனமான கனவு. ஆனால் பயனற்ற கனவு என்று கொண்டுவிடுவது சரித்திரத்திற்குப் பொருந்தாத கூற்று. இலக்கியம் பிறக்கிறது. புதியவிழிப்பும் மக்களிடையே பிறக்கிறது. பிரஞ்சுப் புரட்சியே இதற்கு ஆதாரம். புதிய உதய கன்னியை முதல்முதலாக வரவேற்பவன் கவிஞன் தான். அவனது தரிசனம், மக்களிடையே ஒர் புதிய சமுதாயத்தை சிருஷ்டித்து விடுகிறது.

இதைச் சொல்லும் அவரே தொடர்ந்து தெரிவிக்கிறார்: ஆனால் இதைத் தர்க்கத்தின் அந்தம்வரை சென்று ஆராய்ந்தால், வெறும் பரிகசிப்பிற்குரிய கேலிக்கூத்தாகிறது. ஏனெனில், இந்தக் கொள்கைக்குப் புறம்பான உன்னதஇலக்கியங்கள் இருந்து, அந்தத் தர்க்கவாதத்தைச் சிதறடிக்கிறது. தர்மத்தின் உயர்ச்சிக்காகத்தான் இலக்கியம் என்றால், ரோஜாப் புஷ்பத்தின் அழகு, அதிலிருந்து அத்தர் எடுக்கும் தொழிலில் இருக்கும் லாபத்தைப் பொருத்திருக் கிறது என்று கொள்ளவேண்டும்.

கீட்ஸின் எண்டிமியன் என்ற காவியம் எந்தத் தர்மத்தைத் துரக்கி வைக்க இருக்கிறது? அதன் ஒரு வரியின் முன்பு, உலகத்தைத் தூக்கி நிறுத்தவதற்காகப் பாடுபடும் ஷாவின் நாடகங்கள் பூராவும் நிற்கமுடியுா? என்று கேட்கிறார் புதுமைப்பித்தன்.

அவர் சொல்கிறார். இலக்கியம் என்பது நாடிய பொருளைக் கூட்டுவிக்கும் சாதனம் என்று நினைத்திருப்பதைப் போன்ற தவறான அபிப்பிராயம் வேறு கிடையாது. இலக்கியம் உள்ளத்தின் விரிவு. உள்ளத்தின் எழுச்சி, மலர்ச்சி.

இலக்கியகர்த்தா வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல் களுடன் துணுக்கத்துடன், பின்னல்களுடன் காண்கிறான். அதன்