பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 73

சொத்தாக்கினார் பாரதியார். இன்று பாரதி பரம்பரையில் வந்தோம் என்று ஜம்பமடிக்கும் எழுத்தாளர் கோஷ்டி கலை கலைக்காகவே என்று அப்பண்டிதர் பல்லவியையே வேறு இராகத்தில் பாடுகிறது. தமிழைச் சிறைமீட்ட பாரதியார் செய்த சேவையே பாரதியின் இலட்சியமும்,

கலை கலைக்காகவே என்றுகூறி மொழி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் கலைஞர்களுக்கெதிராகவும் ஏதாதிபத்தியத்துக் கெதிராகவும் - பாசிசத்துக்கெதிராகவும் - முதலாளித்துவத்துக்கு எதிராகவும் குரல் எழுப்ப பாட்டாளி வர்க்கத் துணையுடன் பொதுவுடைமைச்சமுதாயத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய முதல் தமிழ் ஏடு பாரதிதான் என்று இலங்கை எழுத்தாளர்கள் கருதுகிறார்கள்.

1946 ஜனவரியில் தோன்றிய பாரதி ஆகஸ்ட் முடிய உள்ள எட்டு மாதங்களில் ஐந்து இதழ்கள்தான் கொண்டுவர முடிந்தது. அதன் ஆறாவது இதழ் 1948 ஜனவரியில் பிரசுரம் பெற்றது. அதுவே பாரதியின் இறுதி இதழாகவும் அமைந்தது.

முற்போக்கு இலக்கிய இதழாக ஆரம்பித்து, இலக்கியத் துக்கும் அரசியலுக்கும் சமமான இடம் அளித்து வந்த பாரதி, மூன்றாவது இதழுக்குப் பிறகு இலக்கியப் பகுதிகளைக் குறைத்துக் கொண்டு ஒரு அரசியல் ஏடு ஆகவே மாறிவிட்டது.

இலக்கியவாதிகளின் ஆதரவையும் பெறாமல், அரசியல்வாதி களின் பக்கபலத்தையும் பெறமுடியாமல் பாரதி தன் வரலாற்றை முடித்துக் கொண்டது.

முற்போக்கு இலக்கிய ஏடுகள் என்று சொல்லிக்கொண்டு இலங்கையில் அவ்வப்போது சிறுபத்திரிகைகள் வந்திருக்கின்றன. அவை சிறிது சிறிது காலமே உயிர் வாழ்ந்துள்ளன.

நாவலாசிரியர் இளங்கீரனை ஆசிரியராகக்கொண்டு 1960 களில் மரகதம் என்றொரு பத்திரிகை வந்தது.

1968 மருதூர்வாணன் ஆசிரியராக இருந்து "தேன்மதி" என்ற பத்திரிகையை நடத்தினார். இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் அரங்கமாக அது விளங்கியது. கலைக்கூடல் என்ற அமைப்பையும் உருவாக்கி எழுத்தாளர்கள் சந்தித்து உரையாடிப் பழகுவதற்கும் இது ஏற்பாடு செய்தது.

யாழ்ப்பாணம் இ.செ. கந்தசாமி 1967 வசந்தம் மாத இதழை ஆரம்பித்தார். ஈழத்துக்கலை இலக்கியத் துறையில் முற்போக்கான பாதையில் செல்கின்றோம் என்று அறிவித்தது அது. தமிழ்நாட்டி லிருந்து கட்டுப்பாடின்றி இறக்குமதியாகி, இலங்கை வாசகர்கள்