பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைந்த கண்ணாடி 149

வாங்குவதில் களிப்பு காணும் சுபாவம் உடையவளாக இருந்தாளே? ஒரு சமயம்... அதன் நினைவு இனித்தது அவன் உள்ளத்தில். அது தந்த மனத்தை ருசித்தவனாய், அவள் அதை எப்படி ரசிக்கிறாள் என்று அறியும் ஆவல் கொண்டவனாய், சந்திரன் அவள் பக்கம் பார்வையை எறிந்தான்.

காந்திமதி குடத்தைப் பளபள வென்று மின்னும்படி தேய்த்துக் கழுவி மணல் மீது வைத்து விட்டு, நீரில் இறங்கியிருந்தாள். அப்போது அதிர்ஷ்டவசமாக ஆற்றில் வேறு எவருமே இல்லை. அதனால் சந்திரனின் விளையாட்டுக் குணம் தலையெடுத்தது. அவளோடு குறும்பு செய்தும் கேலி பேசியும் மகிழ்வதற்குரிய உரிமையை அவர்களுடைய உறவுமுறை கொடுத்திருந்தது. சந்திரன் மெதுவாகக் குடத்தை ஆற்றில் மிதக்க விட்டான்.

காந்தி நீந்திச் சென்று குடத்தை எடுத்து வந்தாள். அவன்மீது அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால் அதில் மகிழ்ச்சி அவளுக்கு இல்லாமலுமில்லை. போங்க அத்தான்! ஆற்றில் வைத்து இப்படியா விளையாடுவது! யாராவது பார்த்தால்? என்று சிணுங்கினாள்.

"உன்னோடு தாராளமாய்ப் பேசலாம் என்றுதானே நான் ஆற்றங்கரைக்கு வந்தேன்! நீ என்னடான்னா ரொம்பவும் வெட்கப்படுகிறாயே!” என்றான் அவன்.

‘'இப்பவும் நாம் சிறுபிள்ளைகளா! என்று அவள் முனகினாள்.

"விளையாட்டுப் பிள்ளைகள்!" என்று கூறிச் சந்திரன் அவள்மீது நீரை வாரி இறைத்தான்.

"ஐயோ, சும்மா இருங்களேன். ஆட்கள் வருகிற நேரமாச்சு” என்று அழும் குரலில் முணுமுணுத்தான் அவள்.

"தண்ணிருக்குள்ளே ஒடிப்பிடித்து விளையாடலாமா என்று கேட்க வந்தேன். முந்தி நீயும் உன் தோழிகளும் கண்ணாமூச்சி ஆடினர்களே, அப்போ நீ...”

அவள் தன் குழப்பத்தை மறைப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தாள். சிரித்துக் கொண்டே கரை ஏறினாள். அவள் அதை எப்படி மறக்க முடியும்? அதைப் பற்றி அவள் பேசத் தயார் தான். ஆனால், கரையில் சிலபேர்கள் வந்து கொண்டிருந்தார்களே! -

அவர்களைக் கண்டதுமே சந்திரன் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். இல்லாவிடில், 'இப்பவும் அதுபோல் நேர்ந்து உன் முகம் எப்படி மாறும் என்பதைப் பார்க்க வேணும் என்று