பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் அதிர்ச்சி 249

மோகினி போல ஒரு பெண். நீலப் பாவாடையும் தீ நிறத் தாவணியும், கூந்தலில் வெண்பூக்களுமாய் நின்றாள். ஒரு கையில் டீ கிளாஸ்.

சந்திரன் பார்வை அவள் மீது படிந்தது. புரண்டது. மறுபடியும் அச் சிங்காரச் சிலைமீது ஒடி நிலைத்தது.

அவளேதான்... இந்திரா.

கடை முகப்பில், பேரொளியின் கீழ், தெருவைப் பார்த்தபடி நின்ற பகட்டுக்காரியின் கண்களும் அவனைக் கவனித்தன. மோகனமான முறுவல் பூத்தது அவள் ஒளி முகத்தில்.

அந்தச் சூழ்நிலையில், அங்கு பரவிய ஒளிப் பிரவாகத்தில், அவள் மிகவும் எடுப்பாக விளங்கினாலும், அந்த இடத்தில் காணப்படவேண்டிய எழில் உருவம் அல்ல அது - இனிய பெண் ஒருத்திக்கு ஏற்ற இடமில்லை அது - என்றே சந்திரன் கருதினான்.

ஓடும் காரில் இருந்து ஒரே பார்வையில அவளைப் படம் பிடித்து மகிழ வாய்ப்பு கிட்டிய போதிலும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி நிறையவில்லை. சஞ்சலம்தான் குடி புகுந்தது.

- இவள் யாரோ? இவள் ஏன் இவ்விதம் கடைத் தெருவில், சாதாரண டீக்கடையில், மத்தியில் நின்றபடி டீ குடிக்க வேண்டும்? தனது கவர்ச்சித் தன்மையில் தானே பெருமைப் பட்டவளாய், தனது அழகை விளம்பரம் செய்வதுபோல... ஜவுளிக் கடை பொம்மை மாதிரி.

- முதல் தடவைதான் அவள் சோகமயமான மலர்போல் தோற்றம் காட்டினாள். மறுமுறை அப்படி இல்லை. பகட்டான ஆடை அணிந்திருந்தாலும் பண்பு நிறைந்தவள் போல் தான் தோன்றினாள். ஆனால், இப்பொழுதோ?... பாவாடை தாவணி அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. வயசைக் குறைவாகவும் காட்டுகிறது. இன்று டீக்கடையில் அவளோடு வேறு பெண் எவளும் வந்திருக்கதாகத் தெரியவில்லை...

யார் எனத் தெரியாத ஒரு பெண்ணைப்பற்றிச் சந்திரன் அதிகம் அதிகமாக சிந்தித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவளைப் பற்றிய அவனது எண்ணமே வலிமை மிக்க மந்திரமாகி அவளை அவன் முன்னால் இழுத்து வரும் சக்தி பெற்று விட்டதோ என்னவோ!

இந்திரா அவன் பார்வையில் அடிக்கடி தென்படலானாள். எங்கெங்கோ. அவன் எதிர்பாராத இடங்களில் எல்லாம். தனியாகவோ, வயது அதிகமான ஒரு அம்மாளோடு அல்லது